பிரித்தானிய சாலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்… சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை!


பிரித்தானியாவின் லிவர்பூல் நகர மையத்தில் கிறிஸ்மஸ் விளக்குகள் ஏற்றப்பட்ட இரவில் அவா வைட்(12) என்ற சிறுமியை குத்திக் கொன்ற டீனேஜ் சிறுவனுக்கு குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிரித்தானியாவின் லிவர்பூல் நகரத்தில் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் விளக்குகள் ஏற்றப்பட்ட நவம்பர் 25ம் திகதி இரவில் அவா வைட், தன்னையும் தனது நண்பர்களையும் படமெடுப்பதையும் நிறுத்துமாறு சிறுவர்கள் குழுவிடம் கூறியதை அடுத்து, அவா கழுத்தில் கத்தியால் குத்தப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், ஸ்னாப்சாட் வீடியோவில் ஏற்பட்ட தகராறில் அவா வைட்டை கொலை செய்த சிறுவனுக்கு குறைந்தபட்சம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய சாலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்... சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை! | Uk Ava White Death Teenage Boy Sentenced13 Years

இதுத் தொடர்பான வழக்கை விசாரித்த லிவர்பூல் கிரவுன் கோர்ட்டின் நீதிபதி யிப், அவா இறந்ததற்கு ஒரே காரணம், நீங்கள் கத்தியை எடுத்துச் சென்றதே, அதை வெளியே எடுத்து அதைப் பயன்படுத்தியதே என தெரிவித்தார்.

மேலும் “நீங்கள் கத்தியை வைத்து இருப்பது மகிழ்ச்சியை தந்துள்ளது. அன்று மாலையில் அதை உங்கள் நண்பர்களிடம் காட்டிக் கொண்டிருந்தீர்கள். நீங்கள் அதை வைத்திருக்கக்கூடாது.” என நீதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவருக்கு குறைந்தது 13 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதாக உத்தரவிடப்பட்டது.

பிரித்தானிய சாலையில் சிறுமிக்கு நேர்ந்த துயரம்... சிறுவனுக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை! | Uk Ava White Death Teenage Boy Sentenced13 Years

குற்றம்சாட்டப்பட்ட சிறுவன் கவனக்குறைவு ஹைபராக்டிவிட்டி கோளாறு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் செய்திகளுக்கு; யார் முதலிடம்? கன்சர்வேடிவ் கட்சி பிரதமரை தெரிவு செய்யும் முறை… விரிவான தகவல்

மேலும் சட்டப்பூர்வ காரணங்களுக்காக சிறுவனின் பெயர் மற்றும் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.