மதிப்பெண்-மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு: உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த TNPSC

மதிப்பெண் – மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் விவகாரத்தில் டி.என்.பி.எஸ்சி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி உட்பட அரசுப் பணிகளில் மதிப்பெண் அடிப்படை மற்றும் சீனியாரிட்டி முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு அக்டோபர் 1ம் தேதி தீர்ப்பு வழங்கியிருந்தது. இதையடுத்து இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை என டி.என்.பி.எஸ்.சி செயாலளர், பொதுப்பணித்துறை செயலாளர், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர், நெடுஞ்சாலைத்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிராக செந்தூர் என்பவர் உட்பட பலர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்தது உச்ச நீதிமன்றம்.
Supreme Court Terms Man's Arrest
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி உட்பட அரசுப் பணியில் மதிப்பெண் மற்றும் மூப்பு முறையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற முந்தைய உத்தரவை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கடந்த ஜனவரி 19-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செயல்படுத்தப்படவில்லை என ஏற்கெனவே குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் மூன்று வாரத்தில் இந்த விவகாரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய டிஎன்பிஎஸ்சிக்கு கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டிருந்தது.
TNPSC group 4 VAO exam syllabus details for Tamil & English papers,  வேலைவாய்ப்பு, தமிழ்நாடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அரசு வேலை,  குரூப் 4 சிலபஸ், விஏஒ ...
இந்நிலையில் அறிக்கை தாக்கல் செய்துள்ள டிஎன்பிஎஸ்சி நிர்வாகம், “மதிப்பெண் – மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதில் நீதிமன்ற உத்தரவுபடி அனைவருக்கும் மதிப்பெண்- மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்குவது சாத்தியமில்லை. ஆனால் மதிப்பெண் மூப்பு கோரி வழக்கு தொடர்ந்த 1996-ம் ஆண்டு பிரிவினருக்கு மட்டும் மதிப்பெண் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வை கடைபிடிக்கிறோம். அதேவேளையில், டிஎன்பிஎஸ்சி மதிப்பெண் மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவை 2021ம் ஆண்டு முதல் கணக்கிட்டு பதவி உயர்வு வழங்குகிறோம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது
– செய்தியாளர்: நிரஞ்சன் குமார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.