புதிய தலைமை பொருளாதார ஜோதிடரை நிர்மலா நியமிக்க வேண்டும் – ப.சிதம்பரம்

இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கிரகங்களை துணைக்கு அழைத்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
நாசா வெளியிட்ட பிரபஞ்சத்தின் புகைப்படங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதை சுட்டிக்காட்டி ட்வீட் செய்துள்ள முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், பணவீக்கம் 7.01 சதவீதமாகவும், வேலையின்மை 7.8 சதவீதமாகவும் இருந்த அதே நாளில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வியாழன், புளுட்டோ மற்றும் யுரேனஸின் புகைப்படங்களை வெளியிட்டதில் தனக்கு எந்த ஆச்சரியமுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

After giving up hope in her own skills and the skills of her economic advisers, the FM has called the planets to the rescue of the economy

To begin with, she should appoint a new CEA: Chief Economic Astrologer
— P. Chidambaram (@PChidambaram_IN) July 14, 2022

பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் தமது சொந்த திறமை மற்றும் பொருளாதார ஆலோசகர்களின் திறமை மீது நம்பிக்கை இழந்து, நிதியமைச்சர் நிர்மலா கிரகங்களை துணைக்கு அழைத்துள்ளதாக ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். அதற்கு புதிதாக தலைமை பொருளாதார ஜோதிடரை நிர்மலா சீதாராமன் நியமிக்க வேண்டும் எனவும் ப.சிதம்பரம் நையாண்டி செய்துள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.