இந்தியாவின் சிறந்த ஹோட்டல் இது தான்.. பெருமைப்படுத்திய அமெரிக்க இதழ்!

சர்வதேச அளவில் சிறந்த ஹோட்டல்களுக்கான பட்டியல் தேர்தெடுக்கப்பட்டு அவற்றின் பட்டியலை அமெரிக்காவின் இதழ் ஒன்று வெளியிட்டுள்ளது.

இது குறித்து Travel + Leisure’s ‘World’s Best Awards 2022 வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவில் ஓபராய் ஹோட்டல்ஸ் & ரிசார்ட் இடம்பெற்றுள்ளது தான் சிறப்பே.

இந்தியாவில் மட்டும் அல்ல, ஆசியாவில் சிறந்த ஹோட்டல்களில் ஒன்றாக ஓபராய் இடம்பெற்றுள்ளது.

ஒரே ஒரு டாலர் கீழே இருந்து எடுத்தது தப்பா? சாவின் விளிம்புவரை சென்ற பெண்!

இந்தியாவின் சிறந்த ரிசார்ட்

இந்தியாவின் சிறந்த ரிசார்ட்

மராகேச் ஆகியவை வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கின் சிறந்த ரிசார்ட்டாக வழங்கப்பட்டுள்ளன.

 

ஓபராய் உதய்விலாஸ் , உதய்பூருக்கு இந்தியாவின் சிறந்த ரிசார்ட் ஆக விருது வழங்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு வசதிகளை சிறப்பாக செய்து வரும் இந்த ஹோட்டல் மற்றும் ரிசார்ட்-ன் சேவைகளுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தினை உறுதிபடுத்துகின்றது என ஓபராய் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக அதிகாரி விக்ரம் ஓபராய் கூறியுள்ளார்.

முக்கிய சொத்து

முக்கிய சொத்து

எங்கள் நிறுவனர் ராய் பகதூர் எம் எஸ் ஓபராய், முன்னாள் தலைவர் பி ஆர் எஸ் ஒபராய், ஓபராய் எப்போதும் எங்களின் முக்கியமான சொத்தாக பராமரித்து வந்தனர்.

மேலும் எங்கள் ஊழியர்கள் மீண்டும் மீண்டும் நீடித்த நம்பிக்கையை மேம்படுத்த பண்புரிந்து வருகின்றனர்.

மேக் இன் இந்தியாவில் பங்கு
 

மேக் இன் இந்தியாவில் பங்கு

இதே இது குறித்து ஒபராய் குழுமத்தின் செயல் தலைவர் அர்ஜூன் ஓபராய், இந்த மதிப்புமிக்க விருதை பெறுவதில் ஓபராய் மகிழ்ச்சியடைகிறது. மேக் இன் இந்தியா முயற்சிக்கு தங்களின் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதாகவும், இதற்காக மிகுந்த பெருமைப்படுவதாகவும் கூறினார்.

ஓபராய் இயக்கம்

ஓபராய் இயக்கம்

ஓபராய் ஹோட்டல்ஸ் & ரிசார்ட்ஸ், 32 பிராண்டுகளின் கீழ் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் டிராவல் + லெய்சரின் இந்த அங்கீகாரம் மிக முக்கிய பங்கு வகித்தது. ஏனெனில் இந்த இதழ் உலகின் மிக புகழ்பெற்ற பயண பிராண்டுகளில் ஒன்றாகும். அதன் வாசகர்களுக்கு ஹோட்டல்கள், உணவு, வடிவமைப்பு, பணி, கலாச்சாரம், உணவு மற்றும் டிரெண்ட்ஸ் உள்ளிட்டவற்றை வழங்கி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: oberoi ஓபராய்

English summary

Oberoi Hotels & resorts is the best hotel in India: travel + leisure 2022 awards

Oberoi Hotels & resorts is the best hotel in India: travel + leisure 2022 awards/இந்தியாவின் சிறந்த ஹோட்டல் இது தான்.. பெருமைப்படுத்திய அமெரிக்க இதழ்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.