இலங்கையின் மோசமான நிலைக்கு சீனா தான் காரணமா.. அசோக் காந்தா சொல்லும் காரணத்த பாருங்க,

இலங்கையில் நிலவி வரும் மோசமான நிலைக்கு ஒரு வகையில் சீனாவும் ஒரு முக்கிய காரணம் என கூறப்படுகிறது.

உண்மையில் என்ன தான் காரணம்? இலங்கையின் முன்னாள் இந்திய தூதர் அசோக் காந்தா என்ன கூறியிருக்கிறார்? வாருங்கள் பார்க்கலாம்.

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் இலங்கை, அங்கு ஒரு நிச்சயமற்ற நிலையே இருந்து வருகின்றது.

அதல பாதாளத்தில் ரூபாய்.. தொடர்ந்து வரலாறு காணாத சரிவு.. இனியும் சரியலாம்.. நிபுணர்கள் எச்சரிக்கை!

சீனா தான் காரணம்

சீனா தான் காரணம்

அங்கு அடுத்த அதிபராக யார் வரப்போகிறார்கள் அல்லது ராணுவ ஆட்சி அன்மையுமா? அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலையும் பதற்றமும் ஒரு புறம். மறுபுறம் இலங்கையின் இந்த தீவீர பிரச்சனைக்கு சீனா ஒரு முக்கிய காரணம் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. சீனாவின் கடல் வலையில் சிக்கியதே இலங்கையின் சரிவுக்கு முக்கிய காரணம் என ஒரு தரப்பு கடுமையாக குற்றம் சாட்டி வருகின்றது.

சீனாவின் குள்ளதரித்தனம்

சீனாவின் குள்ளதரித்தனம்

இலங்கை மட்டும் அல்ல, பாகிஸ்தானும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது. இதன் மூலம் சீனாவின் குள்ளதரித்தனத்தினை தெரிந்து கொள்ள வேண்டும் என்று பல தரப்பும் தெரிவித்து வருகின்றன.

சீனா தனது கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு கடனை வாரி வழங்கியுள்ளது. குறிப்பாக தெற்காசியாவில் மட்டும் சீனாவில் இருந்து கடன் தொகை 3 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

சீனா தான் காரணமா?
 

சீனா தான் காரணமா?

சீனாவின் இந்த கடன் பிரச்சனைக்கு மத்தியில், இது மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாகவும் இலங்கையில் உருவெடுத்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையின் முன்னாள் இந்திய தூதராக இருந்த அசோக் காந்தா, இலங்கையின் கடன் பிரச்சனை அதிகரிக்க சீனாவின் கடன் தந்திரம் மேலும் கடனை அதிகரித்துள்ளது. எனினும் முழுமையாக சீனாவால் உருவாக்கப்படவில்லை. இது 1948ம் ஆண்டுக்கு பிறகு இலங்கை தற்போது மிக மோசமான நிலையில் உள்ளது. ஆனால் தற்போது இலங்கைக்கு உதவ சீனா முன் வரவில்லை என ஜீ மீடியாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்வில் கூறியுள்ளார்.

முக்கிய காரணம் சீனா

முக்கிய காரணம் சீனா

இலங்கையின் நெருக்கடிக்கு முழுமையாக சீனா காரணம் இல்லை. ஆனால் பொருளாதார ரீதியாக சாத்திய மற்ற திட்டங்கள் மேற்கொண்டு இலங்கையில் மேலும் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணத்திற்கு கடனை தள்ளுபடி செய்வதற்கால்க சீனாவின் மெர்சன்ட்ஸ் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனம், இலங்கையின் ஒரு துறைமுகத்தினை 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இது சீனாவின் கடன் பொறி திட்டத்திற்கு ஒரு முக்கிய உதாரணம் தான்.

ராஜபக்சே தான் முக்கிய காரணம்

ராஜபக்சே தான் முக்கிய காரணம்

இதற்கிடையில் இந்த வார தொடக்கத்தில் மாலத்தீவு தப்பி சென்ற ராஜபக்சே, அங்கிருந்து சிங்கப்பூருக்கும் தப்பி சென்றார். எனினும் மக்களின் பரவலான எதிர்ப்புகளுக்கு மத்தியில், பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளார். ராஜபக்சேவின் தவறான பொருளாதார கொள்கைகள் தான் பொருளாதார சரிவுக்கு முக்கிய காரணம் என மக்கள் தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது.

முக்கிய காரணங்கள்

முக்கிய காரணங்கள்

காந்தாவும், தவறான பொருளாதார கொள்கைகள், அரசியல் சார்பற்ற பிரச்சனைகள்,ஊழல், தவறான நிர்வாகம் என பல காரணிகளுக்கும் மத்தியில், கொரோனா பெருந்தொற்று என பல காரணிகளுக்கு மத்தியில் மக்கள் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டுள்ளனர் என கூறுகின்றார்.

மொத்தத்தில் அரசின் தவறான கொள்கை, சீனாவின் ராஜதந்திரம் என பல்வேறு பிரச்சனைகளுக்கு மத்தியில் மக்கள் சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Is China responsible for Sri Lanka’s poor condition? former amabassador ashok kantha explains

Is China responsible for Sri Lanka’s poor condition? former amabassador ashok kantha explains/இலங்கையின் மோசமான நிலைக்கு சீனா தான் காரணமா.. அசோக் காந்தா சொல்லும் காரணத்த பாருங்க,

Story first published: Saturday, July 16, 2022, 18:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.