இலங்கை போல இன்னும் பல நாடுகள்.. லிஸ்டில் எந்த நாடெல்லாம் தெரியுமா.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை

இலங்கையில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் மக்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் கொஞ்சம் நஞ்சமல்ல.

அத்தியாவசிய தேவைகளுக்கு கூட பல மணி நேரங்களில் வரிசையில் காத்திருக்கும் நிலையை வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

இலங்கையில் நிலவி வரும் இத்தகைய நெருக்கடியான நிலைக்கு மத்தியில், பல நாடுகளும் இலங்கையை போலவெ நெருக்கடியான நிலையில் உள்ளன என தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன.

இலங்கையின் மோசமான நிலைக்கு சீனா தான் காரணமா.. அசோக் காந்தா சொல்லும் காரணத்த பாருங்க,

ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடுகள்

ஆபத்தின் விளிம்பில் உள்ள நாடுகள்

சரிந்து வரும் கரன்சிகளின் மதிப்பு, மற்றும் குறைந்து வரும் அன்னிய கையிருப்புகளின் அடிப்படையில் இந்த தரவானது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கை, லெபனான், ரஷ்யா, சுரினாம் மற்றும் சாம்பியா கடன் பிரச்சனையில் உள்ளன. பெலாரஸ் உள்ளிட்ட நாடுகள் ஆபத்தின் விளிம்பில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முக்கிய பிரச்சனை

முக்கிய பிரச்சனை

குறிப்பாக அதிகரித்து வரும் பணவீக்கம், பொருளாதார வளர்ச்சி சரிவு, கடன் பிரச்சனை, அதிகரித்து வரும் செலவினங்கள் என பலவும் பெரும்பாலான நாடுகளில் அச்சத்தினை தூண்டியுள்ளன.

இதில் பல நாடுகளும் கடன் பிரச்சனையை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தாலும், அவை அபாய கட்டத்தில் தான் உள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கி

அர்ஜென்டினா
 

அர்ஜென்டினா

PESO அதன் பிளாக் சந்தையில் 50% டிஸ்கவுண்டில் வணிகம் செய்வதாக கூறப்படுகின்றது. இதன் அன்னிய செலவாணி கையிருப்பும் குறைவாகவே உள்ளது. இதன் பத்திர சந்தையில் 20 செண்டுகள் மட்டுமே வர்த்தகம் செய்யப்படுகின்றன. 2020 அதன் கடன் மறுசீரமைப்புக்கு பிறகு தற்போது பாதிக்கும் கீழாக குறைந்துள்ளது. அரசாங்கத்திற்கு 2024 வரையில் பெரிய கடன் ஏதும் இல்லை. ஆனால் அதன் பிறகு கடன் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன்

உக்ரைன்

ரஷ்யா – உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், உக்ரைன் கட்டாயம் அதன் 20 பில்லியன் டாலர் கடனை மறுசீரமைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். ஏற்கனவே மார்கன்ஸ் ஸ்டான்லி, அமுண்டி போன்ற ஆய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

செப்ம்பரில் 1.2 பில்லியன் டாலர் செலுத்தப்பட வேண்டிய நிலை உள்ளது. ஆனால் தற்போது உதவிக்காக அண்டை நாடுகளை எதிர் நோக்கியுள்ளது. இதனால் இன்னும் இன்னும் கால அவகசம் கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

துனிசியா

துனிசியா

துனிசியா ஏற்கனவே மிகவும் ஆபத்தில் உள்ள நாடுகளில் உள்ள ஒன்றாகும். ஏறக்குறைய 10% பட்ஜெட் பற்றாக்குறை உள்ளது. உலகின் மிக உயர்ந்த பொதுத் துறை ஊதிய மசோத்தாக்களை கொண்டுள்ள நாடுகளில் ஒன்றாகும். துனிசியாவில் நிலவி வரும் நிலைக்கு மத்தியில் அது மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படலாம். உக்ரைன், எல் சால்வடோர், துனிசியாவும் முதல் மூன்று இடம் பெற்றுள்ளது. இந்த நாட்டின் மீதும் மார்கன் ஸ்டான்லி எச்சரித்துள்ளது.

கானா

கானா

கானாவின் கடன் விகிதமானது அதன் ஜிடிபியில் கிட்டதட்ட 85% ஆக உயர்ந்துள்ளது. அதன் கரன்சி மதிப்பும் பலத்த சரிவினைக் கண்டுள்ளது. ஏற்கனவே அதன் வரி வருவாயில் பாதிக்கும் மேலாக கடனுக்கான செலுட்தி வருகின்றது. தற்போது பணவீக்கம்மும் கிட்டதட்ட 30% நெருங்கி வருகின்றது.

எகிப்து

எகிப்து

எகிப்து கிட்டதட்ட அதன் ஜிடிபியில் கிட்டதட்ட 95% கடனை கொண்டுள்ளது. இந்த ஆண்டில் நிலவி வரும் சவாலான நிலைக்கு மத்தியில் அதிகளவிலான அன்னிய முதலீடுகள் அங்கிருந்து வெளியேறியுள்ளன. ஜேபி மார்கனின் தரவின் படி சுமார் 11 பில்லியன் டாலர் வெளியேறியுள்ளது. அதோடு அடுத்த 5 ஆண்டுகளில் எகிப்து 100 பில்லியன் டாலர் கடன் செலுத்த வேண்டியுள்ளது FIM பார்ட்னர்ஸ் என்ற நிதி நிறுவனமானது தெரிவித்துள்ளது. அதன் கரன்சி மதிப்பும் மோசமான சரிவினைக் கண்டுள்ளது.

கென்யா

கென்யா

கென்யா அதன் வருவாயில் சுமார் 30% கடனுக்கான வட்டியாக செலுத்துவதாக கூறப்படுகின்றது. அரசு பத்திரங்களில் கிட்டதட்ட பாதிக்கும் மேல் அதன் மதிப்பினை இழந்து விட்டன. வரவிருக்கும் 2024ல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரம் செலுத்த வேண்டியுள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இந்த நாட்டில், கடன் சுமை என்பது மிக பெரிய பிரச்சனையாக உள்ளது.

எத்தியோப்பியா

எத்தியோப்பியா

நாட்டின் வளர்ச்சி விகிதமானது உள்நாட்டு போர் பிரச்சனை காரணமாக தடை பட்டுள்ளது. இதன் 1 பில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரத்தினை தொடர்ந்து செயல்படுத்த வேண்டிய நிலையில் உள்ளது.

எல்சால்வடோர்

எல்சால்வடோர்

பிட்காயினை சட்டபூர்வ நாணயமாக கொண்ட இந்த நாடு, ஐஎம் எஃப்பிற்கான கதவினை மூடியுள்ளது. இதன் மீதான நம்பிக்கை இழப்புக்கு மத்தியில் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான பத்திரங்கள், ஏற்கனவே 30% தள்ளுபடி விலையில் வர்த்தகமாகி வருகின்றன. நீண்டகால பத்திரங்கள் 70% தள்ளுபடியிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்தளவுக்கு இந்த நாட்டின் மீதான நம்பிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

பாகிஸ்தான்

பாகிஸ்தான்

அடுத்த இலங்கை பாகிஸ்தானாக இருக்குமோ? என்ற எச்சரிக்கை பல தரப்பில் இருந்தும் வந்துள்ளது. பாகிஸ்தான் ஒரு ஐஎம் எஃப் உடன் ஒரு ஒப்பந்தத்தினை மேற்கொண்டாலும், இது இன்னும் முழுமையாக முடியவில்லை என்றே கூறலாம். தொடர்ந்து அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தில், அன்னிய செலவாணி கையிருப்பு சரிவு, கடன் பிரச்சனை என பல பிரச்சனைகளில் உள்ளது. பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத சரிவினைக் கண்டுள்ளது. அதன் வருவாயில் சுமார் 40% வட்டி செலுத்துவதற்காக பயன்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

பெலாரஸ்

பெலாரஸ்

மேற்கத்திய நாடுகளின் பல்வேறு பொருளாதார தடைகளை எதிர்கொண்டு வரும் ரஷ்யாவுடன், பெலாரஸ்-ம் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டுள்ளன.ஆக இதுவும் பெரும் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றன.

ஈக்வடார்

ஈக்வடார்

லத்தீன் அமெரிக்க நாடு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே பெரும் கடன் பிரச்சனையால் செயலிழந்துவிட்டது. அதோடு வன்முறை எதிர்ப்புகள், அந்த நாட்டின் ஜனாதிபதியை வெளியேற்றும் பிரச்சனையையும் நிலவி வருகின்றது. ஏற்கனவே கடன் பிரச்சனையில் தத்தளித்து வருகின்றது. ஏற்கனவே மானியம், உணவுக்கு மானியம் எரிபொருளுக்கு மானியம என பல வற்றால் நிதி பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது.

நைஜீரியா

நைஜீரியா

நைஜீரியாவும் அதன் வருவாயில் கிட்டதட்ட 30% கடனுக்கான வட்டியாக செலுத்தி வருகின்றன. ஆக பெரும் பிரச்சனையே கடன் ஆகத் தான் உள்ளது.

மொத்தத்தில் மேற்கண்ட நாடுகளின் பட்டியலில் பலவும் மிக மோசமான கடனில் சிக்கித் தவித்து வருகின்றன. மேற்கொண்டு கடன் வாங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Many other countries are in dire straits like Sri Lanka

Many other countries are in dire straits like Sri Lanka/இலங்கை போல இன்னும் பல நாடுகள்.. லிஸ்டில் எந்த நாடெல்லாம் தெரியுமா.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை!

Story first published: Saturday, July 16, 2022, 21:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.