ஒரே ஒரு டாலர் கீழே இருந்து எடுத்தது தப்பா? சாவின் விளிம்புவரை சென்ற பெண்!

அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் கீழே கிடந்த ஒரே ஒரு டாலர் பணத்தை எடுத்ததால் அவர் சாவின் விளிம்பு வரை சென்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அந்த டாலரில் சக்திவாய்ந்த போதைப்பொருள் கலந்து இருந்ததாகவும் அதனால் அவருடைய உடலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஒரே ஒரு டாலருக்கு ஆசைப்பட்டு அவர் அந்த பணத்தை எடுத்தால் அவர் ஆயிரக்கணக்கான டாலர் மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

கீழே கிடந்த ஒரு டாலர்

கீழே கிடந்த ஒரு டாலர்

அமெரிக்காவை சேர்ந்த ரென்னே பார்சன் என்ற பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு ஓட்டலில் அவர் கழிவறையை பயன்படுத்த முடிவு செய்து காரை நிறுத்தினார். கழிவறைக்கு அவர் காத்திருந்த போது கீழே ஒரு டாலர் பணம் இருந்ததை அவர் பார்த்த உடனேயே அவர் எடுத்து வைத்து கொண்டார்.

உடல் மரத்து போனது

உடல் மரத்து போனது

இந்த நிலையில் அந்த ஒரு டாலர் நோட்டை தொட்டவுடன் அவருக்கு திடீரென உடல் முழுவதும் மரத்து போனதாகவும் பேசக்கூட முடியவில்லை என்றும் மூச்சுவிடக்கூட போராடியதாக தெரிகிறது.

பல்வேறு அறிகுறிகள்
 

பல்வேறு அறிகுறிகள்

இது குறித்து ரென்னே பார்சன் தனது பேஸ்புக்கில் கூறியபோது, ‘நான் என் கணவர் ஜஸ்டின் மற்றும் குழந்தைகளுடன் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கழிவறையை பயன்படுத்த காத்திருந்தேன். அப்போது ஒரு டாலர் நோட்டு கீழே கிடந்ததை பார்த்தவுடன் அதை ஆசைப்பட்டு எடுத்தேன். அந்த டாலரை எடுத்ததில் இருந்து திடீரென எனக்கு பல்வேறு அறிகுறிகள் தோன்ற ஆரம்பித்தது.

கணவருக்கும் அறிகுறி

கணவருக்கும் அறிகுறி

எனது தோள்பட்டை இறங்குவது போன்றும் உடனடியாக என் உடலில் பெரிய மாற்றம் ஏற்படுத்தியது போன்றும் உணர்ந்தேன். என் கைகள் மரத்துப் போனதை பார்த்து எனது கணவர் அதிர்ச்சி அடைந்து என்னை தொட்டார். உடனே அவருக்கும் சில பிரச்சனை ஏற்பட்டது.

மோசமான நிலைமை

மோசமான நிலைமை

என்னால் பேசக்கூட முடியவில்லை, மூச்சு விடக் கூட முடியவில்லை, நான் விழித்திருக்க போராடினேன். உடனடியாக எனது கணவர் 911க்கு போன் செய்து தீயணைப்பு நிலையம் அல்லது மருத்துவமனை இருக்கும் இடத்தை அறிய முயன்றார். ஆனால் அதற்குள் எனது நிலைமை மிகவும் மோசமடைந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை

மருத்துவமனையில் சிகிச்சை

இதனை அடுத்து எனது கணவர் காரை மருத்துவமனை நோக்கி விரைந்து செலுத்தினார். நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன் என்று நினைத்தேன். ஆனால் மருத்துவமனையில் எனது கணவர் போலவே மருத்துவர்களும் மிகுந்த அக்கறையுடன் என்னை சிகிச்சைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை செய்தனர். அதன் பிறகுதான் படிப்படியாக நான் குணமானேன். நான் உயிர் பிழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு சுத்தமாக இல்லை. நான் கொஞ்சம் கொஞ்சமாக சுயநினைவை இழந்து கொண்டிருப்பது போல தான் உணர்ந்தேன்’ என்று கூறினார்.

கணவரின் கருத்து

கணவரின் கருத்து

இதுகுறித்து ரென்னே பார்சன் கணவர் கூறியபோது ‘நான் என் மனைவியை தொட்டதும் எனக்கும் சில அறிகுறிகள் தெரிந்ததை உணர்ந்தேன். ஆனால் அந்த அறிகுறிகள் எனக்கு விரைவாக குறைந்து விட்டன. உடனடியாக எனது மனைவியை மருத்துவமனையில் சேர்த்ததால் அவர் உயிர் பிழைத்தார். சிறிது தாமதித்து இருந்தாலும் அவரை எங்களால் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும்’ என்று கூறினார்.

ஃபெண்டானில்

ஃபெண்டானில்

ரென்னே பார்சன் எடுத்த டாலர் நோட்டில் ஃபெண்டானில் என்ற போதைப்பொருள் கலந்து இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃபெண்டானில் ஒரு சக்தி வாய்ந்த மருந்து வகையைச் சேர்ந்தது என்றும் அறுவை சிகிச்சை செய்பவர்களுக்கு வலி தெரியாமல் இருக்க பயன்படுத்தும் மருந்து என்றும் மைக்ரோ அளவை விட சிறிது அதிகம் எடுத்து கொண்டாலும் இது சக்தி வாய்ந்த போதை பொருளாக மாறிவிடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Woman’s Body Got Numb After She Picked Up Money Lying On The Floor!

Woman’s Body Got Numb After She Picked Up Money Lying On The Floor! | ஒரே ஒரு டாலர் கீழே இருந்ததை எடுத்தது தப்பா? சாவின் விளிம்புவரை சென்ற பெண்!

Story first published: Saturday, July 16, 2022, 12:49 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.