கட்டணம் அதிகரிப்பு.. யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் உஷாரா இருங்க.. எதற்கெல்லாம் அதிகரிப்பு!

தனியார் துறையை சேர்ந்த யெஸ் வங்கியானது சில சேவைகளுக்கு கட்டண அதிகரிப்பினை செய்துள்ளது.

அது சரி எதற்கெல்லாம் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது? எவ்வளவு கட்டணம் அதிகரித்துள்ளது? எவ்வளவு அபராதம்? எதற்கெல்லாம்? வாருங்கள் பார்க்கலாம்.

தனியார் துறையை சேர்ந்த வங்கியான யெஸ் வங்கி, வைப்பு நிதிகளை முன் கூட்டியே பெறுதல் என பலவற்றிற்கும் அபராத தொகையினை அதிகரித்துள்ளது.

சிஸ்டம் ஆப்ரேட்டர் வேலை வேண்டாம்.. பிடித்த டீ கடை போதும்.. மாதம் ரூ.45000 சம்பாதிக்கும் சாய்வாலி!

எதற்கு அபராதம் அதிகரிப்பு

எதற்கு அபராதம் அதிகரிப்பு

வங்கி இணையதள அறிக்கையின் படி, புதிய அபராத கட்டணங்களானது ஆகஸ்ட் 8, 2022 முதல் அமலுக்கு வரவுள்ளது.

குறிப்பாக மிக குறுகிய கால டெபாசிட்கள் அல்லது 181 நாட்களுக்குள்ளான டெபாசிட் தொகையை முன் கூட்டியே பெற்றால், அதற்கு அபராதம் 0.25% ல் இருந்து 0.50% ஆக அதிகரித்துள்ளது.

182 நாட்களுக்கு மேல்

182 நாட்களுக்கு மேல்

அதேபோல 182 நாட்களுக்கு மேலாக டெபாசிட்களுக்கு முன் கூட்டியே திரும்ப பெற்றால் அதற்கு கட்டணமாக 0.50%ல் இருந்து, 0.75% ஆக அதிகரித்துள்ளது. எனினும் மூத்த குடிமக்களுக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை.

யாருக்கெல்லாம் பொருந்தும்
 

யாருக்கெல்லாம் பொருந்தும்

யெஸ் வங்கி இணையதளத்தின் படி, 5 கோடி ரூபாய்க்கு குறைவான டெபாசிட்டுகள் முன் பதிவு மற்றும் புதுபித்தல்களுக்கும் முன் கூட்டியே திரும்ப பெறுதலுக்கும் அபராதம் விதிக்கப்படும்.
இந்த முன் கூட்டியே திரும்ப பெரும் கட்டணமானது அனைத்து வகையான வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தனி நபர்கள், தனி நபர் அல்லாத வாடிக்கையாளர்கள், ஊழியர்கள் என அனைவருக்கும் பொருந்தும்.

வட்டி விகிதம்

வட்டி விகிதம்

யெஸ் வங்கியில் ஜூன் 18, 2022 அன்று கடைசியாக வைப்பு நிதிகளுக்காக வட்டி விகிதம் அதிகரிக்கப்பட்டது. இதன் படி பொது மக்களுக்கு வட்டி விகிதம் 3.25% முதல் 6.50% வரையிலும், 3.75% முதல் 7.25% வரையிலும் கொடுக்கப்படுகிறது. டெபாசிட் காலமும் 7 நாட்கள் முதல் 10 வருடங்கள் வரையிலும் உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Yes bank hikes penalty rates on premature withdrawal off fixed Deposits

Yes bank hikes penalty rates on premature withdrawal off fixed Deposits/கட்டணம் அதிகரிப்பு.. யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் உஷாரா இருங்க.. எதற்கெல்லாம் அதிகரிப்பு!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.