கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு புது செக்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

கூடுதலாக செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை வெளியிடும் கூகுள், பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டா, மெடா உள்ளிட்ட உலகின் பெரும் தொழில் நுட்ப நிறுவனங்கள், அதில் கிடைக்கும் வருவாயினை செய்தி நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது இந்திய செய்தி நிறுவனங்களுக்கு ஒரு ஹேப்பி நியூஸ் எனலாம். இது கூடுதலான வருமானம் பார்க்க வழிவகுக்கும்.

இலங்கை போல இன்னும் பல நாடுகள்.. லிஸ்டில் எந்த நாடெல்லாம் தெரியுமா.. எச்சரிக்கும் ஆய்வறிக்கை

புதிய திட்டம்

புதிய திட்டம்

ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பிறகு, தற்போது கூகுள் மற்றும் ஃபேஸ்புக் மற்றும் போன்ற தொழில் நுட்பங்களுக்கு கடிவாளம் போட திட்டமிட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் செய்தி நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை, தங்கள் தளங்களில் காண்பிக்க செய்திகளுக்கு பணம் செலுத்தும் புதிய திட்டத்தினை கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

யாருக்கு லாபம்

யாருக்கு லாபம்

மத்திய அரசால் முன்மொழியப்பட்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், ஆல்ஃபாபெட், (கூகுள், யூடியூப்), மெட்டா (பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ் அப்), ட்விட்டர் மற்றும் அமேசான் போன்ற உலகளாவிய தொழில் நுட்ப மேஜர்கள் இந்திய செய்தித்தாள்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி வெளியீட்டாளர்களுக்கு வருவாயில் ஒரு பங்கினை செலுத்த வேண்டும். இது செய்தி நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட செய்திகளை கொண்டு வருமானம் பார்த்து வருகின்றன.

சட்டம் தேவை
 

சட்டம் தேவை

செய்தி நிறுவனங்களின் செய்திகளை வெளியிடுவதன் மூலம் தொழில் நுட்ப ஜாம்பவான்கள் வருமானம் ஈட்டினாலும், அவர்கள் வருவாயை நியாயமாக பகிர்ந்து கொள்ள தவறுவதால் சட்டத்தில் தேவை உருவாகியுள்ளது. செய்தி வெளியீட்டாளர்களை பொறுத்தவரையில் இந்த டிஜிட்டல் தளங்கள் வருமானம் பெறும் இடைதரர்களாக உள்ளனர்.

அவசியமான ஒன்று

அவசியமான ஒன்று

ஆஸ்திரேலியா, ஐரோப்பிய யூனியனுக்கு பிறகு தற்போது இந்திய அரசும் இந்த நடவடிக்கைய மேற்கோண்டு வருகின்றது. தற்போது அமலில் உள்ள விதிகளில் செய்யப்படவுள்ள மாற்றங்களின் ஒரு அங்கமாக, ஒழுங்காற்று தலையீட்டின் மூலம் இந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது என மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

govt plans to law to make google, Facebook pay for news

govt plans to law to make google, Facebook pay for news/கூகுள், பேஸ்புக், இன்ஸ்டாவுக்கு புது செக்.. மத்திய அரசின் சூப்பர் திட்டம்..!

Story first published: Saturday, July 16, 2022, 23:34 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.