பெஸ்ட் சாய்வாலி.. மாதம் ரூ.45,000 வருமானம்.. டீ கடை வணிகத்தில் கலக்கும் நிஷா.. !

இன்றைய காலகட்டத்தில் வேலை செய்யும் அனைவரும் தங்களுக்கு பிடித்தமான வேலை செய்கிறார்களா? என்றால் நிச்சயம் இல்லை. பலருக்கும் குடும்ப சூழ்நிலை, வறுமை, நிதி தேவை என பல காரணிகளுக்கு மத்தியில் பணிபுரிந்து வருகின்றனர்.

ஆனால் ,மனதிற்கு பிடித்தமான வேலையை செய்வது என்பது மனதிற்கு மிக சந்தோஷத்தினை கொடுக்கும்.

குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த எண்ணம் மிக அதிகம். குறிப்பாக சொந்த தொழில் முனைவோராக இருப்பவர்கள் இதன் காரணமாகவே தங்களது வேலையினை விட்டு விட்டு வந்தவர்களாக இருப்பார்கள்.

செம சான்ஸ்.. 11 மாத சரிவில் தங்கம் விலை.. வாங்கலாமா வேண்டாமா.. நிபுணர்களின் அட்டகாசமான கணிப்பு!

பிடித்தமான வேலை

பிடித்தமான வேலை

சில சமயங்களில் நமது சந்தோஷத்திற்கு குடும்பத்தினரே எதிராக இருப்பது தான் கஷ்டமானதாக இருக்கும். ஆனால் அது தான் நமக்கு நிம்மதியினை கொடுக்கும். சந்தோஷத்தினை கொடுக்கும். மொத்தத்தில் உங்கள் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும். சில சமயங்களில் நாம் செய்த வேலைக்கும், செய்யப்போகும் வேலைக்கும் சம்பந்தமே இருக்காது. ஆனால் அது மனதிற்கு பிடித்தமான ஒரு பணியாக இருக்கும்.

தி சைலண்ட்

தி சைலண்ட்

அப்படி தன் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் வேலையை விட்டு விட்டு, இன்று மனதிற்கு பிடித்தாற்போல வேலை செய்து வருபவர் தான் நிஷா ஹுசைன்.
நிஷா தனது வணிக நுணுக்கங்களை கற்றுக் கொள்ள, ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துள்ளார். அதனை கற்றுக் கொண்ட பின்னரே தனியாக தி சைலண்ட் என்ற பிராண்டினையும் தொடங்கியுள்ளார். இதன் மூலம் பேமஸ் ஆன தந்தூரி டீ உட்பட 10 டீ வகைகளை விற்பனை செய்கிறார்.

வெற்றிக்கான மந்திரம் என்ன?
 

வெற்றிக்கான மந்திரம் என்ன?

ராஜ்கோட்டினை சேர்ந்த நிஷா ஹுசைன்(28) வெற்றிக்கான மந்திரம் மிக எளிதானது. இதற்காக நீங்கள் பிடித்ததொரு வேலையை ரசித்து செய்ய வேண்டும். அதனை பெருமையுடன் செய்ய வேண்டும். அவமானமாக நினைக்க கூடாது. அப்படி செய்யதால் அது சிறிய பணியாக இருந்தாலும் நன்றாக சம்பாதிக்கலாம். அது பெரிய விஷயம் அல்ல என்றும் கூறியுள்ளார்.

ராஜ்கோட்டின் சாய்வாலி

ராஜ்கோட்டின் சாய்வாலி

வழக்கம்போல பல குடும்பங்களில் நடப்பதை போல் தான் பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை விடுத்து., தனியாக தொழில் தொடங்க நினைத்தபோது வீட்டில் நிஷாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. எனினும் அவர்களை சமாதானப்படுத்தி, தனக்கு பிடித்தமான வேலையையும் செய்ய ஆரம்பித்து விட்டார். ஆரம்பத்தில் தனது டீ விற்பனையை ரகசியமாக தொடங்கியவர், தற்போது ராஜ்கோட்டில் மக்களால் ராஜ்கோட்டின் சாய்வாலி என்று பாசமாக அழைக்கப்படுகின்றார்.

15 நாள் வீண் தான்

15 நாள் வீண் தான்

தி சைலண்ட் என்ற அவரது ஸ்டாலில் 10 சுவையான டீ வகைகளை விற்பனை செய்கிறார். சிறு வயதில் இருந்தே விஷேச நேரங்களில் டீ போட்டு ருசிப்பது உண்டு. தொழிலை தொடங்கியபோது நான் நிச்சயம் வெற்றி காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது. ஆரம்பத்தில் ஒரு பெண் தனியாக, புதியதாக டீ கடை நடத்துவதை கண்ட பலரும் பயந்தார்கள். சுமார் 15 நாட்கள் எனது டீ-யினை கீழே தான் ஊற்றினேன்.

இன்ஸ்டா மூலம் பிரபலம்

இன்ஸ்டா மூலம் பிரபலம்

ஒரு நாள் ஒரு வாடிக்கையாளர் எனது கடையினை பற்றி தனது இன்ஸ்டாகிராம் மூலம் வெளியிட்டார். அதிலிருந்து தான் எனது வியாபாரம் அதிகரிக்க ஆரம்பித்தது. பரவலாக எனது வணிகம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதன் பிறகே படிப்படியாக எனது கடைக்கு வரத் தொடங்கினார். என்னை மக்கள் ராஜ்கோட்டின் சாய்வாலி என அழைப்பது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது.

எப்படி செய்யப்படுகின்றது?

எப்படி செய்யப்படுகின்றது?

வழக்கமாக ஒரு கப் சாதாரண டீ 10 ரூபாய் தான். ஆனால் பல்வேறு சுவைகளில் உள்ள டீ-யின் விலை 30 ரூபாயாகும். இதே மிக பிரபலமான டீயின் விலை 40 ரூபாயாகும்.
இந்த தந்தூரியின் டீயின் செய்முறையே ஒரு முறையேனும் இதனை ருசி பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தினை தூண்டுகின்றது. இது ஒரு தேநீர் கப்பில் கொதித்த நீரை ஊற்றி அது தந்தூரில் வைக்கப்படுகின்றது. இதில் உருவாகும் புகை மற்றும் மண் தன்மை என அனைத்தும் சேர்ந்து ஒரு விதமான சுவையினை கொடுக்கிறது.

எத்தனை விதமாக டீ

எத்தனை விதமாக டீ

இதே உடல் நலத்தில் கவனம் செலுத்துபவர்களுக்கு பிளாக் டீ மற்றும் க்ரீன் டீயும் விற்பனை செய்யப்படுகின்றது.

இது மட்டும் அல்ல இஞ்சி டீ, ஏலக்காய் டீ, லெமன் டீ, மசாலா டீ, இலவங்கபட்டை டீ என பல சுவைகளில் கொடுக்கப்படுகின்றது.

பிடிக்காத வேலை

பிடிக்காத வேலை

கடந்த 2015ல் உயர் கல்வி படிப்பை முடித்ததும் நிஷா ராஜ்கோட்டை துணை பதிவாளர் அலுவலத்தில் சிஸ்டம் அப்ரேட்டராக பணிபுரிந்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே தனது வேலையினை பிடிக்காமல் தான் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் மேல் படிப்புக்கும் வழியில்லாமல் மாற்று வருமானம் குறித்து யோசிக்க தொடங்கியுள்ளார். அப்போது தான் விதவிதமான டீ வகைகளை நண்பர்களிடம் கொடுத்துள்ளார். அதற்கு நல்ல வரவேற்பு வரவே அதனையே தொழிலாகவும் மாற்றியுள்ளார்.

தினசரி ரூ.3000 வருமானம்

தினசரி ரூ.3000 வருமானம்

ஆரம்பத்தில் நண்பர்கள் ஊக்குவிப்பால் தொடங்க எண்ணினாலும், அது பற்றி முழுமையாக எதுவும் தெரியாது, இந்த நிலையில் ஒரு உணவகத்தில் டீ போடும் வேலையில் சேர்ந்துள்ளார். அதுவே தனது கடையில் சிறப்பாக பணிபுரிய காரணமாக அமைந்துள்ளது. பல மாத உழைப்புக்கு பிறகு வெறும் 25,000 ரூபாயினை பயன்படுத்தி, விரானி செளக்கில் ஒரு ஸ்டால் அமைத்து, தினசரி 3,000 ரூபாய் வருமானம் பார்க்கத் தொடங்கியுள்ளார்.

வீட்டுக்கு தெரியாமல் தொடக்கம்

வீட்டுக்கு தெரியாமல் தொடக்கம்

ஆரம்பத்தில் இது பற்றி என் வீட்டில் கூட கூறாமல் செய்து வந்தேன். ஆரம்பத்தில் கல்வார் சாலையில் எனது கடையை திறக்க திட்டமிட்டேன். தினமும் காலை 7.30 மணிக்கு ஸ்டாலை திறந்து விடுவேன். பலர் காலையில் நடைபயணம் மேற்கொண்ட பிறகு டீ குடிக்க விரும்புகிறார்கள். ஆக தற்போது நல்ல முறையில் ஓரளவுக்கு வணிகம் செல்கின்றது. இன்னும் இதனை பற்றி முழுமையான நம்பிக்கை வந்தபிறகே, பெரியளவில் தொடங்க திட்டமிடுவதாகவும் கூறுகின்றார்.

ஹோட்டல் வணிகம்

ஹோட்டல் வணிகம்

ஏனெனில் இந்த ஆண்டில் தொடக்கத்தில் உணவகம் ஒன்றை தொடங்கி அதன் பின்னர் மூடிவிட்டதாகவும், கடந்த ஆண்டு ஒவ்வொரு மாதமும் 50,000 ரூபாய் வரை சம்பாதித்ததாகவும், கொரோனா காலத்தில் கடை மூடப்பட்டதால் நஷ்டம் கண்டுள்ளதாகவும், எனினும் மீண்டும் வணிகத்தினை மேம்படுத்த முயற்சி செய்து வருகின்றேன் எனவும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rajcot’s favorite chaiwali quit her job to start own small tea stall: Earns Rs.45,000 per month

Rajcot’s favorite chaiwali quit her job to start own small tea stall: Earns Rs.45,000 per month/சிஸ்டம் ஆப்ரேட்டர் வேலை வேண்டாம்.. பிடித்த டீ கடை போதும்.. மாதம் ரூ.45000 சம்பாதிக்கும் சாய்வாலி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.