ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி.. !

ஆதார் அட்டை 12 இலக்க நம்பரை கொண்ட தனித்துவமான அடையாள எண்ணாகும். இது அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ஒன்றாகும். இதனை இந்திய குடிமகன் அனைவரும் பெற்றுக் கொள்ளலாம்.

ஆதார் அட்டையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவது முகவரி மாற்றம் தான். அதனை மக்கள் மிக எளிதாக செய்து கொள்ளலாம். அதனையும் இருந்த இடத்தில் இருந்தே ஆன்லைனிலேயே செய்து கொள்ளலாம்.

ஒருவர் ஒரு இடத்தில் இருந்து , மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் போது, ஆதார் அட்டை மற்றும் முகவரி மாற்றம் செய்ய வேண்டியது அவசியமாகிகிறது.

இல்லதரசிகளுக்கு குட் நியூஸ்.. பாமாயில் விலை விலை குறையலாம்.. ஏன் தெரியுமா?

ஆன்லைனில் மாற்றம்

ஆன்லைனில் மாற்றம்

ஆதார் அட்டையில் உள்ள முகவரியினை ஆன்லைனிலேயே புதுபித்துக் கொள்ளலாம்.

இதற்காக https://uidai.gov.in/ என்ற அரசின் அதிகாரப்பூர்வ தளத்திற்கு செல்லலாம்.

அதில் My aadhaar என்ற ஆப்சனை கிளிக் செய்யவும்.

அதில் Update Demographics Data online என்ற ஆப்சனை கொடுக்கவும்.

அது அடுத்த பக்கத்தில் தொடங்கும். அதில் லாகின் என்ற ஆப்சனை கொடுக்கவும்.

ஓடிபியை பயன்படுத்தி நுழையலாம்

ஓடிபியை பயன்படுத்தி நுழையலாம்

இதில் ஆதார் எண் மற்றும் ஒரு முறை ஓடிபியை பயன்படுத்தி உள்நுழைய வேண்டும். இதற்காக உங்களது பதிவு மொபைல் எண்ணை பதிவிட்ட பிறகு, ஓடிபி அனுப்பப்படும். பெற்றப்பட்ட ஓடிபியுடன், கேப்ட்சா எழுத்துகளையும் பதிவிடவும்.

இதனை கொடுத்து லாகின் செய்தால், இது அடுத்த பக்கத்தில் தொடங்கும்.

அடுத்த பக்கத்தில் ஆன்லைனில் ஆதார் புதுபிக்கவும் என்ற விருப்பத்தினை கொடுத்து கிளிக் செய்யவும். நீங்கள் அடுத்த பக்கத்திற்கு செல்வீர்கள். அங்கு எதனை மாற்றவேண்டுமே அதனை கிளிக் செய்து Proceed to update aadhaar என்பதை கொடுக்கவும்.

எவ்வளவு நாள் ஆகும்?
 

எவ்வளவு நாள் ஆகும்?

இதில் பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி உள்ளிட்டவை அடங்கும். ஆக இதில் எதனை மாற்றம் செய்ய வேண்டுமோ அதனை மாற்றம் செய்து கொள்ளலாம்.

இதில் முகவரியை புதுபிக்க சரியானதொரு முகவரியினை கொடுக்க வேண்டும். அதேபோல பின் கோடு, சம்பந்தப்பட்ட நகரம் என பலவற்றையும் சரியாக கொடுக்க வேண்டும்.

ஆதார் அட்டை புதுபிப்பு அல்லது முகவரி மாற்றத்திற்கு புதிய முகவரியை சரி பார்க்க, சரியான ஆவணத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கட்டணம் எவ்வளவு?

கட்டணம் எவ்வளவு?

புதுபிக்கப்பட்ட ஆதார் எண்ணை உள்ளிட்ட பிறகு, கிளிக் என்ற ஆப்சனை கிளிக் செயவும். இதற்காக கட்டணமாக உங்களிடம் இருந்து 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

இதனை அதிகாரிகள் சரிபார்த்த பிறகு புதிய முகவரியுடன் அட்டை கிடைக்கும்.இதற்கு 90 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளலாம். எனினும் இதற்கு புதுபித்தல் ஆவணங்கள் என்பது அவசியமான ஒன்றாகும்.

ஆஃப்லைனில் மாற்றம் செய்யலாம்

ஆஃப்லைனில் மாற்றம் செய்யலாம்

ஆன்லைன் ஆதார் அட்டை முகவரி மாற்றத்துடன் கூடுதலாக, ஆதார் அட்டை புதுப்பிப்பு அல்லது ஆதார் அட்டை முகவரி மாற்றம், ஆஃப்லைனிலும் மாற்றம் செய்யப்படலாம். பதிவு செய்தல், திருத்துதல் மற்றும் ஆதார் தொடர்பான பிற செயல்பாடுகளுக்காக ஆதார் சேவை மையங்களை (ASK) அரசாங்கம் அமைத்துள்ளது. ஆதார் சேவை மையங்கள் வாரத்தின் 7 நாட்களும் திறந்திருக்கும் மற்றும் ஆதார் பதிவு போன்றவற்றுக்கு சாதாரண குடிமக்களால் பயன்படுத்தப்படுகின்றன.

சேவை மையங்கள்

சேவை மையங்கள்

பெயர், முகவரி, மின்னஞ்சல் ஐடி, மொபைல் எண், பிறந்த தேதி போன்ற அரசாங்கப் பதிவேடுகளில் உள்ள எந்தவொரு மக்கள்தொகைத் தரவையும் புதுப்பிக்கவும்.

மத்திய அரசு தபால் நிலையங்கள், வங்கி நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பிஎஸ்என்எல் அலுவலகங்களில் ஆதார் பதிவு மற்றும் ஆதார் அட்டை புதுப்பிப்பு சேவைகளை மேற்கொள்ள முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Can I change my address in Aadhar card online?

Can I change my address in Aadhar card online?/ஆன்லைனில் ஆதார் அட்டையில் முகவரி மாற்றம் செய்வது எப்படி.. !

Story first published: Sunday, July 17, 2022, 19:51 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.