எதிர்காலத்திற்கான போர்ட்போலியோ உருவாக்க வேண்டுமா.. என்னென்ன பங்குகளை சேர்க்கலாம்..!

பங்கு சந்தை முதலீட்டில் போர்ட்போலியோ முதலீடு என்பது மிக அவசியமான ஒன்று. உங்கள் முதலீடுகளை ஒரே பங்கினில் குவிக்காமல், பிரித்து பல்வேறு துறைகளில் முதலீடு செய்வது நல்லது.

நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்திய சந்தையானது தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றதே. இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா? என்ற கேள்வியும் எழலாம்.

ஆனால் இந்த காலகட்டத்திலும் பல்வேறு நிறுவனங்களின் பங்கு விலையானது, சரிவினைக் கண்டாலும், தொடர்ந்து சில நிறுவனங்களின் பங்கு விலையும் ஏற்றம் கண்டு கொண்டு தான் உள்ளது. இந்த நிலையில் நீண்டகால நோக்கில் சில பங்குகள் விலை அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

ரூ.1.68 லட்சம் கோடி காலி.. பெரும் இழப்பினை கண்ட முதலீட்டாளர்கள்.. என்ன தான் நடக்குது?

நல்ல ஏற்றம் காணலாம்

நல்ல ஏற்றம் காணலாம்

நஷாரா, சோமேட்டோ, நய்கா உள்ளிட்ட ட்ஜிட்டல் தளங்களின் வணிகமானது சிறந்த வணிகமாக இருந்து வருகின்றது. இன்னும் 5 – 10 ஆண்டுகளில் டிஜிட்டல் துறையில் நல்ல வளர்ச்சி காணலாம். அவற்றில் சில பங்குகள் மல்டி பேக்கர் பங்குகளாக ஏற்றம் காணலாம். தற்போது அவற்றின் வளர்ச்சியில் சுணக்கம் இருந்தாலும் ஏற்றம் காணலாம்.

நல்ல ஏற்றம் கண்ட பங்குகள்

நல்ல ஏற்றம் கண்ட பங்குகள்

10 ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் பைனான்ஸ், டாடா எல்க்ஸி உள்ளிட்ட பங்குகளை வாங்கியிருந்தால், இன்று அதில் நல்ல லாபம் பார்த்திருக்கலாம். நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நிறுவனங்களாகும். அவை நஷ்டமடையவில்லை. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் 10 – 15 ஆண்டுகளுக்கு முன்பு பஜாஜ் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு சிறப்பாக கடன் வழங்குபவராக உள்ளது.

டாடா எல்க்ஸி
 

டாடா எல்க்ஸி

டாடா எல்க்ஸி தற்போது பயிற்சி சேவையினை வழங்கி வரும் ஒரு நிறுவனமாகும். தற்போது நிறுவனம் பற்பல மாற்றங்களை கண்டுள்ளது. டிஜிட்டல் வணிகத்தினை மேம்படுத்தியுள்ளது. ஆக இதன் வணிகத்தின் மதிப்பானது மேற்கோண்டு அதிகரிக்கலாம். பங்குகளின் மதிப்பும் அதிகரிக்கலாம்.

டிஜிட்டல் வளர்ச்சி

டிஜிட்டல் வளர்ச்சி

அடுத்த 10 ஆண்டுகளில் டிஜிட்டல் வளர்ச்சியானது மாபெரும் வளர்ச்சியினை எட்டலாம். ஏற்கனவே ஐடி பங்குகளை பல முதலீட்டாளர்களும் வைத்துள்ளனர். கேள்வி என்னவெனில் புதிய வணிக யுக்திகளை வளர்ப்பதில் ஐடி துறையானது பல முக்கிய நடவடிக்கைகளை எடுக்கலாம். இது மேற்கொண்டு நல்ல லாபம் கொடுக்கலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது உள்ளதை காட்டிலும் 2030ல் வேறாக இருக்கலாம். அடுத்த சில காலாண்டுகளில் இந்த நிறுவனத்தின் பல்வேறு வணிகங்களை தனித் தனியாக பிரிக்கலாம். இது ஜியோ, சில்லறை வணிகம், எரிபொருள், புதுபிக்கத்தக்க எரிபொருள் என பல வகையிலும் வளர்ச்சி மேம்படலாம்.

தன்லா சொயூசன்ஸ்

தன்லா சொயூசன்ஸ்

இது தவிர தன்லா சொல்யூசன்ஸ், சரீகமா, பிவிஆர் ஐனாக்ஸ் உள்ளிட்டபங்குகளும் கவனிக்க வேண்டிய பட்டியலில் உள்ளன. இதே நிதி நிறுவனமான சோழமண்டலம் பைனான்ஸ் பல்வேறு வணிகத்தினை மேம்படுத்தி வரும் ஒரு நிறுவனமாகும்,. இதுவும் கவனிக்க வேண்டிய பங்குகளில் ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Want to build a portfolio for the future?What stocks can be added?

Want to build a portfolio for the future?What stocks can be added? /எதிர்காலத்திற்கான போர்ட்போலியோ உருவாக்க வேண்டுமா.. என்னென்ன பங்குகளை சேர்க்கலாம்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.