டாடா-வின் மாபெரும் திட்டம்.. இனி ஆட்டம் வேற லெவல் தான்..!

இந்தியாவின் முன்னணி வர்த்தகக் குழுமமாக இருக்கும் டாடா பல துறையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் அதானி குழுமத்திற்குப் போட்டியாக நுழைந்தாலும், கடந்த சில மாதத்தில் புதிதாக எந்த வர்த்தகத் துறையிலும் நுழையவில்லை.

இதற்கு மாறாகப் புதிதாகத் துவங்கிய வர்த்தகம் அனைத்தையும் மறுசீரமைப்புச் செய்து வருவதோடு, ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மற்றும் வர்த்தகத்தின் திறனை அதிகரிக்கும் முக்கியமான பணிகளைச் செய்து வருகிறது.

இதன் படி சந்திரசேகரன் தலைமையிலான டாடா குழும நிர்வாகம் தற்போது டாடா ஸ்டீல் நிறுவனத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

விஸ்வரூபம் எடுக்கும் சீனா.. பீதியில் MI5, FBI.. ரஷ்யா – உக்ரைன் போருக்குப் பின் நடந்தது என்ன..?

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல், நடப்பு நிதியாண்டில் இந்தியா மற்றும் ஐரோப்பா ஆப்ரேஷன்ஸ்-ல் சுமார் 12,000 கோடி ரூபாயை மூலதன விரிவாக்கமாக, இத்தொகையை முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டி.வி.நரேந்திரன் தெரிவித்தார். இந்த முதலீட்டின் மூலம் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தி விற்பனை அதிகரிக்கும்.

டி.வி.நரேந்திரன்

டி.வி.நரேந்திரன்

இந்தியாவின் மிகப்பெரிய ஸ்டீல் எஃகு நிறுவனமான டாடா ஸ்டீல் இந்தியாவில் ரூ.8,500 கோடியும், ஐரோப்பாவில் நிறுவனத்தின் செயல்பாடுகளில் ரூ.3,500 கோடியும் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாக டாடா ஸ்டீல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக (எம்டி) இருக்கும் நரேந்திரன் தனது பேட்டியில் தெரிவித்தார்.

கலிங்கநகர் திட்டம்
 

கலிங்கநகர் திட்டம்

இந்தியாவில், கலிங்கநகர் திட்ட விரிவாக்கம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்படும், மேலும் ஐரோப்பாவில், உணவு, தயாரிப்பு கலவை செறிவூட்டல் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான விஷயங்களில் இப்புதிய முதலீடுகள் மூலம் கவனம் செலுத்தப்படும் என்று நரேந்திரன் கூறினார்.

8 மெட்ரிக் டன்

8 மெட்ரிக் டன்

டாடா ஸ்டீல் நிறுவனம் ஒடிசாவின் கலிங்கநகரில் உள்ள தனது ஸ்டீல் தொழிற்சாலை உற்பத்தி திறனை 3 மெட்ரிக் டன்னில் இருந்து 8 மெட்ரிக் டன்னாக விரிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. இது தவிர, டாடா ஸ்டீல், NINL கையகப்படுத்துதலில், இந்தியாவில் கனிம வளர்ச்சிக்காகச் சுமார் 12,000 கோடி ரூபாய் செலவழிக்கும் என்று அவர் கூறினார்.

சீனா மீது ஊசலாடும் கத்தி.. கழுத்தை நெறிக்கும் பிரச்சனை..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Tata Steel to invest Rs 12,000 cr in FY23 on India, Europe operations says CEO Narendran

Tata Steel to invest Rs 12,000 cr in FY23 on India, Europe operations says CEO Narendran டாடா-வின் மாபெரும் திட்டம்.. இனி ஆட்டம் வேற லெவல் தான்..!

Story first published: Sunday, July 17, 2022, 18:14 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.