தொழில்: பாலியல் அனுபவம்.. இளம்பெண்ணின் Linkedin புரொபைலால் நெட்டிசன்கள் விவாதம்!

LinkedIn சமூக வலைத்தளத்தில் ஏராளமானோர் தங்களது கல்வி மற்றும் அனுபவம் குறித்த பதிவுகளை செய்து வேலை தேடுவார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

இதில் உள்ள புரொபைலை பார்த்து தான் பல நிறுவனங்கள் வேலைக்கு ஆள் எடுப்பார்கள் என்பதும் LinkedIn மூலம் பலர் நல்ல வேலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இளம்பெண் ஒருவர் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்றும் தனக்கு நல்ல அனுபவம் உள்ளது என்றும் LinkedIn புரொபைலில் பதிவு செய்திருப்பது நெட்டிசன்களை பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.

பாலியல் தொழிலாளி

நியூயார்க்கை சேர்ந்த ஆரியல் எகோட்ஸி என்ற இளம்பெண் LinkedIn சமூகவலைதளத்தில் சமீபத்தில் இணைந்து தனது புரொபைலில் தான் ஒரு பாலியல் தொழிலாளி என்று பதிவு செய்துள்ளார். அவரது பக்கத்திற்கு ஒரு சில நாட்களில் 9000 ஃபாலோயர்கள் குவிந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுபவம்

அனுபவம்

அனுபவம் பகுதியில் அவர் குறிப்பிட்டபோது ‘எனக்கு இந்த தொழிலில் நல்ல அனுபவம் உள்ளது’ என்றும் ‘விருப்பம் உள்ளவர்கள் தன்னை அணுகலாம் என்றும் பதிவு செய்துள்ளார். இது இணையதளங்களில் மிகப்பெரிய விவாதமாக மாறியுள்ளது.

வேலை ராஜினாமா
 

வேலை ராஜினாமா

மேலும் அந்த பெண் தான் ஒரு நல்ல வேலையில் இருந்ததாகவும் ஆனால் அந்த வேலையை இரண்டு வாரங்களுக்கு முன்பு ராஜினாமா செய்து விட்டதாகவும் தற்போது தான் பாலியல் தொழிலில் ஈடுபட முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

 சேமிப்பு

சேமிப்பு

ஏற்கனவே வேலை செய்த நிறுவனத்தின் மூலம் ஓரளவு சேமித்து வைத்திருக்கிறேன் என்றும் ஆனால் அந்த சேமிப்பு எனக்கு சந்தோஷத்தை அளிக்குமா? என்பது எனக்கு தெரியவில்லை என்றும் அதனால்தான் இந்த புதிய தொழிலில் ஈடுபட்டு உள்ளேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சொந்த விருப்பம்

சொந்த விருப்பம்

நான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை ராஜினாமா செய்துவிட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுவதை நான் என் சொந்த விருப்பத்தின் பேரில் முடிவு எடுத்துள்ளதாகவும் நான் விரும்பி எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது என்றும் கூறியுள்ளார்.

அதிக கட்டணம்

அதிக கட்டணம்

மேலும் தனக்கு இந்த தொழிலில் தற்போது ஓரளவுக்கு அனுபவம் உள்ளது என்றும் அதனால் பாலியல் தொழிலில் நான் அதிகமாக கட்டணம் பெறுவேன் என்றும் அந்த புரொபைலில் விளக்கியுள்ளார். பணம் செலுத்த விருப்பமில்லாதவர்கள் என்னை ரிஜெக்ட் செய்தால் அதைப் பற்றி எந்த கவலையும் இல்லை என்றும் ஏனெனில் நான் கட்டணம் பெறுவதற்காகவே இந்த தொழிலை ஆரம்பித்து உள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேரம் இல்லை

பேரம் இல்லை

பாதுகாப்பான, விளையாட்டுத்தனமான, தான் விரும்பும் வழியில் தன்னை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். மேலும் தன்னை பற்றி யாரிடமும் விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், அதே நேரத்தில் பேரம் பேச வேண்டிய அவசியமும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நெட்டிசன்களின் ரியாக்சன்

நெட்டிசன்களின் ரியாக்சன்

இளம்பெண்ணின் இந்த பதிவு பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய பதிவுக்கு 8000க்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் ரியாக்சன் செய்துள்ளார்கள் என்பதும் 1500க்கும் மேற்பட்ட கமெண்ட்ஸ் பதிவாகி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

குவியும் வாழ்த்து

குவியும் வாழ்த்து

பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கருத்து தெரிவித்து உள்ளனர் என்பதும் கருக்கலைப்பு என்பது எப்படி ஒரு பெண்ணின் உரிமையோ, அதேபோல் பாலியல் தொழிலை தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு பெண்ணுக்கு உரிமை என்று என ஒரு நெட்டிசன் தெரிவித்து உள்ளார்.

உடல் உழைப்பு

உடல் உழைப்பு

பல்வேறு துறைகளில் இருக்கும் பெண்கள் தங்களுடைய உடல் உழைப்பை வைத்துதான் வருமானம் ஈட்டுகிறார்கள் என்றும், அதேபோல் பாலியல் தொழிலும் ஒரு உடல் உழைப்பு தான் என்றும் இன்னொரு நெட்டிசன் தெரிவித்தார். மேலும் எல்லோருமே ஐடி துறைகளிலும், ஆசிரியர்களாகவும், ஆடிட்டராகவும் ஆக முடியாது என்றும் பாலியல் தொழில் மூலம் ஒரு பெண் வருமானம் ஈட்டுவது என சுயமாக முடிவு எடுத்தால் அதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை என்று இன்னொரு நெட்டிசன் பதிவு செய்துள்ளார்.

விவாதம்

விவாதம்

ஆனால் அதே நேரத்தில் பலர் அவருடைய பதிவுக்கு கண்டனமும் தெரிவித்துள்ளனர். இது மிகவும் ஆபத்தான விஷயம் என்றும் இதை தொடர அனுமதிக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளனர். மொத்தத்தில் நெட்டிசன்களின் இந்த வாத விவாதங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Woman LinkedIn Profile includes Sex Worker and Experience, Sparks debate!

Woman LinkedIn Profile inlcludes Sex Worker and Experience, Sparks debate! | தொழில்: பாலியல், அனுபவம்: அதிகம்… இளம்பெண்ணின் Linkedin புரொபைலால் நெட்டிசன்கள் விவாதம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.