பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. வாரி வழங்கும் நட்பு நாடுகள்..!

இலங்கையை அடுத்து அதிகப்படியான நிதி நெருக்கடியில் இருப்பது பாகிஸ்தான் என்பது அனைவருக்கும் தெரியும், எப்போது திவாலாகும் என்ற அச்சத்தில் பாகிஸ்தான் அரசு தன்நாட்டு மக்களுக்கு அதிகப்படியான கட்டுப்பாடுகளை விதித்து அன்னிய செலாவணியைக் காப்பாற்றி வருகிறது.

இந்த நிலையில் சர்வதேச நாணய நிதியத்தால் பாகிஸ்தான் நாட்டின் உயர்த்தப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பில் உள்ள இடைவெளியைக் குறைக்க, பாகிஸ்தான் இந்த மாதம் 4 பில்லியன் டாலர்களை நட்பு நாடுகளிடமிருந்து பெற வாய்ப்புள்ளது என்று பாகிஸ்தான் நாட்டின் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதாரத்தைக் காப்பாற்ற 6 பில்லியன் டாலர் கடன் வாங்க திட்டமிட்டு உள்ளதாக அறிவித்துள்ளார் நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில்.

பணவீக்கத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் அரசின் திடீர் முடிவு.. இனி மக்களின் நிலை?

 IMF அறிக்கை

IMF அறிக்கை

சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) உயர்த்திக் காட்டப்பட்ட வெளிநாட்டுக் கையிருப்பு பற்றாக்குறையைக் குறிப்பிட்டு IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளதாக நிதி அமைச்சர் மிஃப்தா இஸ்மாயில் சனிக்கிழமை கூறினார். ஜூலை மாத இறுதிக்குள் இந்த 4 பில்லியன் டாலர் இடைவெளியை நிரப்ப போதுமான கடன் கிடைக்கும் எனவும் IMF படி, 4 பில்லியன் டாலர் இடைவெளி உள்ளது மிஃப்தா இஸ்மாயில் உறுதி அளித்துள்ளார்.

நட்பு நாடுகள்

நட்பு நாடுகள்

ஒரு நட்பு நாட்டிலிருந்து எண்ணெய் கட்டணத்திற்காக 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களையும், ஒரு வெளிநாட்டு நாடு 1.5 பில்லியன் டாலர் முதல் 2 பில்லியன் டாலர் வரையிலான பங்குகளில் G2G (அரசாங்கம்-அரசாங்கம்) அடிப்படையில் முதலீடு செய்யும் என்று, மேலும் மற்றொரு நட்பு நாடு எரிவாயு கட்டணத்திற்காக எரிவாயுவைக் கொடுக்கும் என்றும், மேலும் மற்றொரு நட்பு நாடு சில டெபாசிட்களைச் செய்யும் என்று மிஃப்தா இஸ்மாயில் நாடுகளைப் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்துள்ளார்.

நாணய கையிருப்பு
 

நாணய கையிருப்பு

வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல், நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரித்து வருதல் மற்றும் டாலருக்கு நிகரான பாகிஸ்தான் ரூபாயின் மதிப்புச் சரிவு ஆகியவை நாட்டின் பேமெண்ட் பிரச்சனையை உருவாக்கும் எனத் தெரிவித்துள்ளனர். IMF ஒப்பந்தம் இல்லாமல், வெளிநாட்டு நிதிக்கான பிற வழிகளைத் திறக்க வேண்டும் என்று இஸ்மாயில் முக்கியக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

6 பில்லியன் டாலர் கடன்

6 பில்லியன் டாலர் கடன்

6 பில்லியன் டாலர் கடன் திட்டத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து 3.5 பில்லியன் டாலர்கள் மற்றும் உலக வங்கியிடமிருந்து 2.5 பில்லியன் டாலர்கள் உட்படப் பலதரப்பு கடன் வழங்குபவர்களிடமிருந்து பாகிஸ்தான் இந்த நிதியாண்டில் நிதி ஆதரவுகளைப் பெறும் என்று இஸ்மாயில் கூறியுள்ளார்.

இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி

இஸ்லாமிய மேம்பாட்டு வங்கி

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடமிருந்து 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதல் 500 மில்லியன் டாலர்கள் வரை எதிர்பார்க்கப்படுகிறது, அதே நேரத்தில் இஸ்லாமிய மேம்பாட்டு வங்கியும் நிதியை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் இஸ்மாயில் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Pakistan will get 4 billion USD from friendly countries sooner to avoid payment crisis

Pakistan will get 4 billion USD from friendly countries sooner to avoid payment crisis பாகிஸ்தானுக்கு அடித்த ஜாக்பாட்.. வாரி வழங்கும் நட்பு நாடுகள்..!

Story first published: Sunday, July 17, 2022, 18:01 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.