போராட்டகாரர்களை அடக்கும் அரசு.. மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்குமா..?

சீனா உலகிலேயே வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நாடு மட்டும் அல்லாமல் உலகப் பொருளாதாரத்தின் உற்பத்தி இன்ஜின். சீனா முடங்கினால் ஒட்டுமொத்த உற்பத்தி, வர்த்தகச் சந்தையும் முடங்கும் நிலை உள்ளது.

உலகில் அனைத்து நாடுகளும் ஏதாவது ஒரு விஷயத்திற்காகவோ அல்லது பொருளாதாரத்திற்காகச் சீனாவை நம்பி தான் இயங்கி வருகிறது. இதற்குச் சிறிய உதாரணம் இந்தியா – சீனா இடையே எல்லை பிரச்சனை அதிகமாக இருக்கும் வேளையிலும் சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் தொடர்ந்து அதிகரிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சீனாவின் நிதிநிலை ஆட்டம் காணவைக்கும் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. இதை எதிர்த்து போராடுபவர்கள் மீது சீன அரசு கடுமையான நடவடிக்கையும், அடக்குமுறைகளையும் அவிழ்த்துவிட்டு உள்ளது.

இந்திய FMCG நிறுவனங்களில் அதிக சம்பளம் வாங்கும் CEOக்கள்.. யார்.. எவ்வளவு சம்பளம்?

ஹெனான் மாகாணம்

ஹெனான் மாகாணம்

சீனா-வின் ஹெனான் மாகாணத்தில் இருக்கும் 6 சிறிய கிராம வங்கிகளில் மக்கள் டெப்பாசிட் செய்யப்பட்ட பணத்தை எடுக்க முடியாமல் முடக்கப்பட்டது. இந்தப் பிரச்சனை ஹெனான் பகுதியில் இருந்து தலைநகரான பெய்ஜிங்-யை கடந்து உலகம் முழுவதும் பரவியது.

6 பில்லியன் டாலர் சொத்து

6 பில்லியன் டாலர் சொத்து

இந்த 6 வங்கிகளில் 6 பில்லியன் டாலர் சொத்துக்களும், 4 லட்சம் வாடிக்கையாளர்களும் உள்ளனர். பணத்தை இழந்து நிற்கும் மக்கள் தங்கள் பணத்தைப் பெறுவதற்காகப் போராட்டத்தில் குதித்த போது ஹெனான மாகாண அரசு மற்றும் வங்கி அதிகாரிகள் எப்படிப் போராட்டக்காரர்களை அடக்கினர் என்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இன்சூரன்ஸ் பாதுகாப்பு
 

இன்சூரன்ஸ் பாதுகாப்பு

சீனா வங்கிகள் வைப்பு நிதி செய்தவர்களுக்கு 5,00,000 வரையில் இன்சூரன்ஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது, இதைக் கொண்டு பாதிக்கப்பட்டவர்களுக்குப் பணத்தை அளிக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அனைவரின் கோவிட் டெஸ்ட் கோடு-ஐ சிவப்பாக மாற்றியுள்ளது ஹெனான் அரசு.

கோவிட் டெஸ்ட் கோடு

கோவிட் டெஸ்ட் கோடு

கோவிட் டெஸ்ட் கோடு என்பது பொது இடங்களுக்குச் செல்லும் போது அவர்கள் பாதுகாப்பானவர்கள், கொரோனா பாதிப்பு இல்லாதவர்கள் என்பதைக் காட்டும் ஸ்மார்ட்போன் வசதி. இது பச்சையாக இருந்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை, ஆனால் சிவப்பாக இருந்தால் எந்தப் பொது இடத்திற்கும் செல்ல முடியாது. குறிப்பாகப் பஸ், கார் போன்ற வாகனங்களைப் பயன்படுத்த முடியாது.

போராட்டம்

போராட்டம்

இப்படிப் போராட்டக்காரர்களின் கோவிட் டெஸ்ட் கோடு சிவப்பாக மாற்றிய பின்னர், பொதுமக்கள் தத்தம் வங்கிகளைத் தாண்டி ஹெனான் தலைநகர் Zhengzhou பகுதியில் இரு்ககும் People’s Bank Of China கிளை முன் போராட்டம் நடத்தினர்.

உள்ளூர் ரவுடிகள்

உள்ளூர் ரவுடிகள்

அப்போது ஹெனான் அரசு அதிகாரிகள் போராட்டக்காரர்களைக் கலைக்க வேண்டும் என்பதற்காக உள்ளூர் ரவுடிகளை ஏவி போராட்டக்காரர்களைப் போலீஸ் அதிகாரிகள் கண் முன்னே தாக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

Minxin Pei அறிக்கை

Minxin Pei அறிக்கை

இந்த வங்கி மோசடியில் இருக்கும் பெரும் ஊழலை மறைக்க வங்கி நிர்வாகம், ஹெனான் அரசு ஆகியவை போராட்டக்காரர்களைக் கலைக்க இப்படி மோசமான நடந்துக்கொண்டு உள்ளாதாகப் பேராசிரியர் Minxin Pei தெரிவித்துள்ளார்.

4000 வங்கிகள்

4000 வங்கிகள்

சீனாவின் ஜிடிபி மற்றும் கடனுக்கான அளவீடு 264 சதவீதமாக இருக்கும் வேளையில் சீனாவில் ஏற்பட்டு உள்ள வங்கி மோசடி பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. சீனாவில் சிறு மற்றும் நடுத்தரப் பிரிவில் மட்டும் சுமார் 4000 வங்கிகள் உள்ளது. இந்த வங்கிகளில் 14 டிரில்லியன் டாலர் சொத்துக்கள் உள்ளது.

 சீன அரசுக்கு சிக்கல்

சீன அரசுக்கு சிக்கல்

சிறிய வங்கிகளாக இருந்தாலும் வங்கி மோசடிகளைச் சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் இல்லை. ஏற்கனவே சீன அரசு ரியல் எஸ்டேட் பிரச்சனையில் மாட்டிக்கொண்டு இருக்கும் வேளையில் தற்போது வங்கி ஊழல் பெரும் பாதிப்பாக மாறியுள்ளது. இதனால் சீன பொருளாதாரம் வீழ்ச்சி அடையவும் வாய்ப்புகள் உள்ளது. 4 டிரில்லியன் டாலர் பாஸ்.. எத்தனை ஜீரோ வரும் தெரியுமா..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

China’s debt bomb: Henan local officials sent thugs to assault Bank depositors in Zhengzhou protest

China’s debt bomb: Henan local officials sent thugs to assault Bank depositors in protest போராட்டகாரர்களை அடக்கும் சீன அரசு.. மீண்டும் மக்கள் புரட்சி வெடிக்குமா..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.