அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கும் 10 பொருட்கள்.. ஆண்கள் அதிர்ஷ்டகாரர்கள் தான்!

ஒரு ஆணுக்கு விற்கப்படும் அதே பொருள் ஒரு பெண்ணுக்கு விற்கப்பட்டால் விலை அதிகமாக இருப்பது என்பது பலரும் அறிந்திராத உண்மைகள் ஆகும்.

பெண்களுக்கு பிடித்தமான பிங்க் கலரில் வடிவமைத்து ஆண்கள் பயன்படுத்தும் அதே பொருளை பெண்ணுக்கு அதிக விலையில் விற்பனையாளர்கள் விற்பனை செய்து வருகிறார்கள்.

அவ்வாறு ஒரு பெண் அதிக விலைக்கு வாங்கும் 10 பொருட்கள் குறித்து தற்போது பார்ப்போம்.

உபர் மீது 500 பெண்கள் வழக்கு.. அத்துமீறுகிறார்களா ஓட்டுனர்கள்?

பெண்கள் ஆடை

பெண்கள் ஆடை

ஆண்களுக்கு ஆடை தயாரிக்கும் அதே துணியில் பெண்களுக்கான ஆடை தயாரிக்கப்பட்டால் அந்த ஆடையின் விலை அதிகமாகிறது என பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. பல நிறுவனங்கள் பெண்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கும்போது, ​​கூடுதல் டிசைன் மற்றும் அதிக வண்ணங்கள் இருப்பதாக கூறி அதிக பணத்தை பெறுகின்றன. குறிப்பாக அமெரிக்காவில், ஆண்களை விட பெண்களின் ஆடைகள் மீது கட்டணங்கள் ஆறு மடங்கு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது..

ஷேவிங் பொருட்கள்

ஷேவிங் பொருட்கள்

ஷேவிங் செய்ய பயன்படுத்தப்படும் ரேஸர்கள் மற்றும் க்ரீம்கள் ஒரே மாதிரியாக தயாரிக்கப்பட்டாலும் பெண்களின் ரேஸர்கள் மற்றும் ஷேவிங் கிரீம்கள் ஆண்களின் தயாரிப்புகளை விட இரண்டு மடங்கு அதிகம். பெண்கள் பயன்படுத்தும் ஷேவிங் பொருட்களின் ஒரே வித்தியாசம், அவை பிங்க் கலரில் இருப்பது மட்டுமே என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சில நேரங்களில் பெண்களின் பேக்கேஜ் அளவு ஆண்களுக்கு விற்கப்படுவதை விட சிறியதாக இருக்கும்.

முடி பராமரிப்பு பொருட்கள்
 

முடி பராமரிப்பு பொருட்கள்

கூந்தல் பராமரிப்புக்கான விலை வேறுபாடு மற்ற தயாரிப்புகளை போல் பெரிதாக இல்லை என்றாலும், ஷாம்பு, கண்டிஷனர் மற்றும் ஸ்டைலிங் பொருட்கள் போன்ற பொருட்கள் பெண்களுக்கு 100 கிராமுக்கு $2.60 ஆகவும், ஆண்களுக்கு ஏற்ற தயாரிப்புகளுக்கு $2.33 ஆகவும் உள்ளது என்று 2016ஆம் ஆண்டு ParseHub நிறுவனம் எடுத்த ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது.

முடி வெட்டுதல்

முடி வெட்டுதல்

அமெரிக்காவில், ஆண்களை விட பெண்கள் சராசரியாக $11 முடி வெட்டுவதற்கு அதிகமாக கட்டணம் செலுத்துகிறார்கள் என கண்டறிந்தது. பெண்களுக்கு நீளமான முடி மற்றும் மிகவும் சிக்கலான ஸ்டைலிங் தேவைகள் இதற்கு காரணம் என்று சலூன் உரிமையாளர்கள் கூறுகின்றனர், ஆனால் இது உண்மையில்லை என கூறப்படுகிறது.

 டியோடரன்ட்

டியோடரன்ட்

2021 ஆம் ஆண்டு ParseHub என்ற நிறுவனம் கனடாவில், 100 கிராம் எடையுள்ள டியோடரண்டிற்கு ஆண்களை விட பெண்கள் சராசரியாக 51.31% அதிகமாக செலுத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளது. பெண்களின் டியோடரண்டிகளில் வண்ணம் மற்றும் வாசனை வித்தியாசமானது என காரணம் கூறினாலும் விலை வேறுபாடு மிக அதிகம் என ParseHub கண்டறிந்துள்ளது.

சோப்புகள்

சோப்புகள்

பெண்கள் பயன்படுத்தும் பாடி வாஷ் மற்றும் சோப்புகளின் விலை ஆண்கள் பயன்படுத்தும் சோப்புகளை விலை அதிக வித்தியாசம் உள்ளது என ParseHub கூறுகின்றது. பெண்கள் பயன்படுத்தும் பாடி வாஷ்களின் விலை 100 கிராமுக்கு 65% அதிகம் என்றும் பிங்க் கலரை மட்டும் பெண்களுக்கான சோப்பில் பயன்படுத்தி விலை அதிகமாக விற்பனை செய்யப்படுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. வண்ண பேக்கேஜிங் மற்றும் நறுமணத்திற்காக ஆண்கள் செலுத்தும் தொகையில் பாதிக்கு மேல் பெண்கள் சோப்புகளுக்கு செலுத்தி வருகின்றனர்.

தலைக்கவசங்கள்

தலைக்கவசங்கள்

உங்கள் செல்ல மகள் நீல நிறத்திற்கு பதிலாக அழகான பிங்க் மற்றும் ஊதா நிற ஹெல்மெட்டை பயன்படுத்த விரும்பினால், நீங்கள் அதற்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும். அதேபோல் பெண்களுக்கான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்கள் ஆண்களுக்கு விற்பனை செய்யப்படும் விலையை விட சராசரியாக 6% அதிகம் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக ஒரு பெண் பயன்படுத்தும் ஸ்கூட்டரின் விலை ஒரு பையன் பயன்படுத்தும் ஸ்கூட்டரின் விலையை கிட்டத்தட்ட இரண்டு மடங்காகும். இரு ஸ்கூட்டர்களுக்கான ஒரே வித்தியாசம் அதன் பிங்க் நிறம் மட்டுமே.

மோட்டார் வாகன காப்பீடு

மோட்டார் வாகன காப்பீடு

2021 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், பெண்கள் குறைவான விபத்துக்களை சந்தித்தபோதிலும், 21 மாநிலங்களில் கார் இன்சூரன்ஸுக்கு ஆண்களை விட பெண்கள் அதிக கட்டணம் செலுத்துகின்றனர். அமெரிக்கா முழுவதும் சராசரியாக 0.4% முதல் 7.6% பெண்களுக்கான மோட்டார் வாகன காப்பீடு கட்டணம் அதிகம் என கூறப்படுகிறது. இதற்கான காரணம் தெளிவாக இல்லை.

கார் பழுது

கார் பழுது

2017 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், ஆண்களை விட பெண்கள் அதிகமாக கார் பழுது பார்ப்பதற்காக செலவு செய்துள்ளனர். இருப்பினும் பெண்கள் பேரம் பேசும்போது கார் பழுது பார்க்கும் ​​கடைகள் விலையை குறைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

கார் கொள்முதல்

கார் கொள்முதல்

கார் வாங்கும் பெண்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு டொராண்டோ பல்கலைக்கழக ஆய்வில், பெண்களிடம் கார் விலை அதிகமாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக வயதான பெண்கள் புதிய காருக்கு ஆண்களை விட அதிகமாக பணம் செலுத்த வாய்ப்புள்ளது. ஆனால் அதே நேரத்தில் இளம் வயது பெண்கள் ஆண்களுக்கு நிகரான விலைகளை செலுத்துகிறார்கள், ஏனெனில் அவர்கள் விலையில் பேரம் பேசும் நபர்களாக உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How Women Pay More for Pink.. Here are the Ten Products

How Women Pay More for Pink.. Here are the Ten Products | அதிக விலை கொடுத்து பெண்கள் வாங்கும் 10 பொருட்கள்.. ஆண்கள் அதிர்ஷ்டகாரர்கள் தான்!

Story first published: Monday, July 18, 2022, 8:12 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.