உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு| Dinamalar

குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசரநிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆப்பிரிக்காவில் முதல்முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.இதனைதொடர்ந்து குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

latest tamil news

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் இது குறித்து கூறியதாவது: இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர்.பல்வேறு நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது. மேலும் குரங்கு அம்மை நோயை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டிருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.