சிக்கன் ஒரு கிலோ வெறும் 50 ரூபாய்.. 15 நாளில் 50% சரிவு.. என்ன காரணம்..?

கடந்த பதினைந்து நாட்களில் பல்வேறு மாநிலங்களில் கோழிக்கறி விலை பாதியாகச் சரிந்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா மற்றும் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோழிக்கறி மற்றும் முட்டை விலை அதிகளவில் குறைந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு கிலோ கோழிக்கறி விலை முன்பு 115 ரூபாயாக இருந்த நிலையில் கடந்த 15 நாட்களில் 60 ரூபாயாகச் சரிந்துள்ளது. இதேபோல் ஜார்க்கண்டில் மாநிலத்தில் தற்போது ஒரு கிலோ கோழிக்கறி வெறும் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்தத் திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம்.. இறைச்சி முட்டை விலை திடீரெனச் சரி என்ன காரணம்..?

சோமேட்டோ சரிவுக்கு இதுவும் காரணமா.. உஷாரா இருங்க.. !

ஷ்ராவண மாதம்

ஷ்ராவண மாதம்

வட இந்தியாவில் ஷ்ராவண மாதம் வந்ததால், இறைச்சி உண்பதைப் பலர் கைவிடும் பழக்கத்தைக் கொண்டு உள்ளனர். இதனால் கறி மற்றும் முட்டைக்கான டிமண்ட் குறைந்து விலை குறைந்துள்ளது. இதனால் இறைச்சி வர்த்தகத்தை மட்டுமே நம்பியிருப்பவர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஜூன் மாதம்

ஜூன் மாதம்

குறிப்பாக ஜூன் மாதம் உணவு பொருட்களின் விலை உயர்வின் போது இறைச்சி மற்றும் முட்டையின் விலையும் அதிகரித்தது. இதனால் மக்கள் விலை உயர்வின் காரணமாகவே வாங்க முடியாமல் தவித்தனர்.

மழை
 

மழை

இதனால் விற்பனை சரிந்த நிலையிலும் பரவலாக மழை பெய்து வருவதால் கோழிகள் எடையும் அதிகரித்துள்ளது. இதனால் கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை விற்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் இந்த விலை ரீடைல் விலை இல்லை, பண்ணையில் இருந்து வாங்கப்படும் விலை.

கறி மற்றும் முட்டை

கறி மற்றும் முட்டை

ஆனால் ஜூலை 15 முதல் துவங்கிய ஷ்ராவண மாதத்தின் வாயிலாக மக்கள் கறி மற்றும் முட்டை போன்ற அசைவ உணவை சாப்பிடுவதைத் தவிர்க்கும் வழங்கத்தைப் பெரும்பாலான வட இந்திய மாநிலத்தில் இருக்கும் காரணத்தால் இறைச்சி விலை பெரிய அளவில் குறைந்துள்ளது என இந்திய கோழி வளர்ப்போர் சங்கத்தின் உயர் அதிகாரி வசந்தகுமார் ஷெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு விலை

தமிழ்நாடு விலை

மேலும் முட்டை விலை வட இந்திய மாநிலங்களில் பல இடத்தில் 30-35 சதவீதம் குறைந்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் ஒரு கிலோ கோழிக்கறி 180 முதல் 220 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chicken price crashes by 50 percent During month of Shravan; In Maharashtra ₹60/kg, In Jharkhand ₹50/kg

Chicken price crashes by 50 percent During the month of Shravan; In Maharashtra ₹60/kg, In Jharkhand ₹50/kg சிக்கன் விலை வெறும் 50 ரூபாய்.. 15 நாளில் 50% சரிவு.. என்ன காரணம்..?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.