மல்லி இலை, புதினா, மிளகாய், தக்காளி… ஒரு மாதம் வரை ஃப்ரெஷா வைக்கிறது எப்படி?

How to keep Green chilies, Coriander leaves, Mint, Tomato fresh for month: நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா, தக்காளி போன்றவை கொஞ்ச நாளிலே அழுகி விடும் அல்லது காய்ந்து விடும். இதனால் நாம் இவற்றை அடிக்கடி வாங்க நேரிடுகிறது. இவற்றின் விலைகளிலும் ஏற்ற இறக்கங்கள் இருந்து வருவதால், பலருக்கு அடிக்கடி வாங்குவது சிரமமாக உள்ளது. இதற்கு தீர்வாக ஒரு முறை வாங்கி, ஒரு மாதத்திற்கு மேல் பயன்படுத்த முடிந்தால், சூப்பராக இருக்கும் அல்லவா! உங்களுக்காகவே இந்த எளிய டிப்ஸ்.

மிளகாய், மல்லி இலை, புதினா மற்றும் தக்காளியை ஒரு மாதம் வரை எப்படி சேமித்து வைப்பது என்பதை இப்போது பார்ப்போம்.

இதையும் படியுங்கள்: சர்க்கரை, உப்பு, வெங்காயம்.. இப்படியும் யூஸ் பண்ணலாம்

முதலில் பச்சை மிளகாய், மல்லி இலை, புதினா அல்லது தக்காளி இவற்றில் எதை நீண்ட நாட்கள் சேமிக்க விரும்பினாலும், வாங்கி வந்தவுடன் அவற்றை நன்றாக தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

பின்னர் தண்ணீர் நன்றாக வடிந்தவுடன், அவற்றில் அழுகிய, சேதமடைந்த, காய்ந்த பகுதிகளை அல்லது முழுமையாக நீக்கிக் கொள்ளுங்கள்.

இப்போது பச்சை மிளகாய்க்கு காம்புகளை நீக்கிக் கொள்ளுங்கள். மல்லி இழை மற்றும் புதினாவுக்கு தேவைப்பட்டால் அதன் வேர்களை நீக்கிக் கொள்ளலாம்.

இப்போது குளிர் சாதனப் பெட்டியில், இந்தப் பொருட்களை வைக்கும் கண்டெய்னரில் டிஷ்யூ பேப்பர்களை பரவலாக நிரப்பிக் கொள்ளுங்கள்.

பின்னர் இதில் இந்த பொருட்களை போட்டு, அதன் மீது மீண்டும் டிஷ்யூ பேப்பர்களை பரப்பிக் கொள்ளுங்கள்.

மேலே உள்ள டிஷ்யூ பேப்பரை வாரம் ஒருமுறை மாற்றுங்கள். கீழே உள்ள டிஷ்யூ பேப்பரை மாற்ற வேண்டிய அவசியமில்லை. இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் ஒரு மாதம் வரை இந்தப் பொருட்களை சேமித்து வைக்கலாம்.

மற்றொரு முறையாக மிளகாய் உள்ளிட்ட இந்த பொருட்களை காற்று புகாத டப்பா அல்லது பிளாஸ்டிக் பையில் பேப்பர் டவலுடன் சேர்த்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம்.

இன்னுமொரு முறையாக மிளகாய்களை அரைத்து பேஸ்ட்டாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இவ்வாறு செய்யும் போது மிளகாய், புதினா, மல்லி இலை, தக்காளி போன்றவை நீண்ட நாட்கள் ப்ரெஷ் ஆக இருப்பதோடு, அதே சுவை அளிக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.