மலிவான மொபைல் டேட்டாவை கொண்ட நாடுகள்…. இந்தியாவுக்கு எந்த இடம்?

உலகிலேயே மொபைல் டேட்டா மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் நாடு எது என்பது குறித்த ஆய்வை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து உள்ளது.

இந்த நிறுவனத்தின் ஆய்வுகளின் அடிப்படையில் உலகிலேயே மொபைல் டேட்டாவை மிக குறைந்த விலையில் கிடைக்கும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில் உலகில் மிகவும் மலிவான விலையில் மொபைல் டேட்டா கொடுக்கும் நாடுகளின் பட்டியல் குறித்து தற்போது பார்ப்போம்.

உலக அளவில் மொபைல் டேட்டா விலை

உலகளாவிய மொபைல் டேட்டா விலை 2022ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி உலகம் முழுவதும் மலிவான மொபைல் டேட்டாவை கொண்ட நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. Cable.co.uk என்ற இணையதளத்தால் தொகுக்கப்பட்ட பட்டியலில் 233 நாடுகளில் இருந்து 5,292 மொபைல் டேட்டா விலை பகுப்பாய்வு செய்தது.

ஒரு ஜிபி ரூ.3.30 முதல் ரூ.3320 வரை

ஒரு ஜிபி ரூ.3.30 முதல் ரூ.3320 வரை

ஒரு ஜிபி மொபைல் டேட்டா எவ்வளவு செலவாகும் என்பதன் அடிப்படையில் நாடுகளின் பட்டியல் தரவரிசையை உருவாக்கியுள்ளது. ஒரு ஜிபி டேட்டாவின் சராசரி விலை $0.04 (ரூ. 3.20) என்ற பட்டியலில் இஸ்ரேல் முதலிடத்தில் உள்ளது. தெற்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள பிரிட்டிஷ் வெளிநாட்டு பகுதியான செயின்ட் ஹெலினா ஒரு ஜிபி மொபைல் டேட்டாவிற்கு மிக அதிகமாக $41.06 செலவாகும் அதாவது இந்திய மதிப்பில் ரூ. 3,320 ஆகும்.

எந்த நாடுகளில் மொபைல் டேட்டா மலிவு
 

எந்த நாடுகளில் மொபைல் டேட்டா மலிவு

ஆய்வு அறிக்கையின் பட்டியலின்படி இஸ்ரேல், இத்தாலி, சான் மரினோ மற்றும் பிஜி ஆகியவை அதன் பயனர்களுக்கு மலிவான மொபைல் டேட்டாவை வழங்கும் முதல் நான்கு நாடுகளில் உள்ளன. இஸ்ரேலில் உள்ள பல சேவை வழங்குநர்கள் விரிவான 4G LTE மற்றும் 5G நெட்வொர்க் கவரேஜ்களை வழங்குகிறார்கள். அமெரிக்காவை விட அதிக ஸ்மார்ட்போன் சந்தை ஊடுருவலை இஸ்ரேல் நாடு கொண்டுள்ளது.

இத்தாலி

இத்தாலி

குறைந்த விலை மொபைல் டேட்டாவில் இரண்டாவது இடத்தில் உள்ள இத்தாலி, மொத்த மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 95 சதவீத மக்களுக்கு 4ஜியுடன் 5ஜி டேட்டாவை வழங்குகிறது. மேலும், நாட்டில் மிகவும் பிரபலமான சேவை வழங்குநர்கள் கூட்டாக உலகின் சில மலிவான மொபைல் டேட்டாக்களை வழங்குகிறார்கள்.

சான் மரினோ

சான் மரினோ

சான் மரினோவில் 100 சதவீதம் 5ஜி கவரேஜ் உள்ளது. இத்தாலிய நெட்வொர்க் வழங்குநரான TIM என்ற நிறுவனத்தால் நிறுவப்பட்ட 5G நெட்வொர்க்கைக் கொண்ட முதல் ஐரோப்பிய மாநிலம் இதுவாகும். இந்த நாடும் மொபைல் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் வழங்குகிறது.

ஃபிஜி தீவு

ஃபிஜி தீவு

மலிவான நெட்வொர்க் வழங்குனருடன் நான்காவது நாடு ஃபிஜி. தொலைதூர தீவு நாடான ஃபிஜி இரண்டு மொபைல் நெட்வொர்க்குகளை கொண்டுள்ளது. இந்த இரண்டு நெட்வொர்க்குகளும் தீவு முழுவதும் 4G மற்றும் 5G டேட்டாவை குறைந்த விலையில் வழங்குகின்றன.

அதிக விலையில் மொபைல் டேட்டா

அதிக விலையில் மொபைல் டேட்டா

உலகிலேயே அதிகமான விலையில் மொபைல் டேட்டா வழங்கும் நாடுகளாக செயின்ட் ஹெலினா, பால்க்லாண்ட் தீவுகள், சாவோ டோம் மற்றும் பிரின்சிப், மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள டோகெலாவ் மற்றும் யேமன் ஆகியவை ஆகும்.

 இந்தியாவின் இடம் என்ன?

இந்தியாவின் இடம் என்ன?

பிஜிக்கு அடுத்தபடியாக, இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்தியாவில் டேட்டாவின் விலை சராசரியாக ஒரு ஜிபி டேட்டாவிற்கு ரூ.14 பெறப்படுகிறது. மொபைல் டேட்டாவை பெரிதும் நம்பியிருக்கும் மக்கள்தொகை காரணமாக, டேட்டாவுக்கான அதிக தேவையை இந்தியா காண்கிறது. இந்த தேவை அதிகரிப்பு வழங்குநர்களை லாபகரமான விலைகளை வழங்க வழிவகுத்தது.

ஆசிய நாடுகள்

ஆசிய நாடுகள்

மலிவான மொபைல் டேட்டாவை வழங்கும் முதல் 20 நாடுகளில் மூன்றில் ஒரு பங்கை கொண்ட பல ஆசிய நாடுகளில் இந்தியாவும் நேபாளமும் உள்ளன. ஜப்பான், பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பகுதி மற்றும் தென் கொரியா ஆகிய மூன்று நாடுகள் மட்டுமே மிகவும் விலையுயர்ந்த தரவுகளைக் கொண்டுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Which Country is the lowest mobile data prices in the world. Check India, Pak, Sri Lanka rates

Which is the lowest mobile data prices in the world. Check India, Pak, Sri Lanka rates | மலிவான மொபைல் டேட்டாவை கொண்ட நாடுகள்…. இந்தியாவுக்கு எந்த இடம்?

Story first published: Thursday, July 28, 2022, 7:21 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.