இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்- வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

போர்ட் ஆப் ஸ்பெயின்,

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வசப்படுத்தி விட்டது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதில் முதல் 3 ஆட்டங்கள் வெஸ்ட் இண்டீசிலும், கடைசி இரு ஆட்டங்கள் அமெரிக்காவிலும் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டின் தரோபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த நிலையில் இந்ததொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி : பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், ஷமார் ப்ரூக்ஸ், நிக்கோலஸ் பூரன் (கேப்டன்), ஷிம்ரோன் ஹெட்மயர், டேவன் தாமஸ், ரோவ்மேன் பாவல், ஒடியன் ஸ்மித், ஜேசன் ஹோல்டர், ரொமாரியோ ஷெப்பர்ட், கீமோ பால், டொமினிக் டிரேக்ஸ், அல்சாரி ஜோசப், ஒபெட் மெக்காய், அகேல் ஹொசைன், ஹெய்டன் வால்ஷ் ஜூனியர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.