மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி தமிழக விமான நிலையங்கள் எப்போது விரிவாக்கப்படும்?

புதுடெல்லி: தஞ்சாவூர், தூத்துக்குடி, கோவை விமான நிலையங்கள் எப்போது விரிவுபடுத்தப்படும் என மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ள கேள்வியின் விவரம்: * தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களை விரிவுபடுத்தவும், அதன் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதா? கடந்த 3 ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளை தெரியப்படுத்தவும்.* கொரோனா காலத்திற்கு பிறகு விமான நிலையங்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை உள்ளதா? அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.*விமானத்துறை சார்பில் தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் விவரங்களை அத்திட்டத்தின் நிறைவு நிலை விவரங்களுடன், அத்தி்ட்டத்திற்கென ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ள நிதியின் விவரங்களோடு சேர்த்து தெரியப்படுத்தவும்.*தஞ்சாவூர். தூத்துக்குடி, கோயம்புத்தூர் விமான நிலையங்களை விரிவுப்படுத்தவும், அதன் உட்கட்டமைப்பை மேம்படுத்தவும் ஒன்றிய அரசு ஏதேனும் திட்டம் வகுத்துள்ளதா? அதன் விவரங்களை தெரியப்படுத்தவும்.இவ்வாறு கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா அளித்த பதில்:* தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள் உட்பட அனைத்து நிலையங்களையும் மேம்படுத்துதல், நவீனபடுத்துதல் என்பது தொடர் செயல்முறை. இந்திய விமான நிலைய ஆணையமும், மற்ற விமான நிலைய ஆப்ரேட்டர்களும் இணைந்து, அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களின் முனையத்தை மாற்றியமைத்தல், புதிய விமான நிலைய முனையம் அமைத்தல், விமான ஓடுதளத்தை வலுபடுத்துதல் போன்ற பணிகளுக்காக மூலதன செலவின் இலக்காக ரூ. 91,000 கோடி நிர்ணயித்துள்ளனர்.*கடந்த 3 ஆண்டுகளில் திருச்சி விமான நிலையத்தில் ரூ.80.43 கோடி செலவிலும், மதுரை விமான நிலையத்தில் ரூ.48.36 கோடி செலவிலும், கோயம்புத்தூர் விமான நிலையத்தில் ரூ.65.84 கோடி செலவிலும், சென்னை விமான நிலையத்தில் 138.16 கோடி செலவிலும் பல்வேறு திட்டப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது.* கொரோனா காலத்திற்கு பிறகு விமான நிலையங்களுக்கு உதவிடும் வகையில் ஒன்றிய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த மதிப்பீட்டு அறிக்கை எதையும் அமைச்சகம் தயார் செய்யவில்லை. கொரோனாவுக்கு முந்தைய காலங்களில் இருந்ததைப் போல், உள்நாட்டு விமானங்களில் பயணிகளின் எண்ணிக்கையானது முழுமையாக மீட்கப்பட்டுள்ளது. * தஞ்சாவூர் விமான நிலையத்தில் உள்ள புதிய ராணுவ விமான தளத்தை மேம்படுத்துவதற்கான அறிவிப்பை இந்திய விமான நிலைய ஆணையம் முன்மொழிந்துள்ளது. மேலும், கோயம்புத்தூர் நிலையத்தின் ஓடுதளத்தை விரிவாக்கம் செய்ய தேவையான நிலத்தை மாநில அரசு கையகப்படுத்தி இந்திய விமான நிலைய ஆணையத்திடம் ஒப்படைத்தவுடன் அப்பணிகளும் தொடங்கப்படும்.தூத்துக்குடி விமானநிலையத்தின் ஓடுதள விரிவாக்கப் பணிகள், புதிய உள்நாட்டு விமான முனையத்துக்கான கட்டுமான பணிகளும் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஒதுக்கப்பட்ட மற்றும் செலவிடப்பட்ட நிதிதமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகளுக்கான திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டு செலவிடப்பட்டுள்ள நிதியின் விவரங்கள்:விமானநிலையம்         ஒதுக்கப்பட்ட நிதி (கோடியில்)        செலவிடப்பட்ட நிதி(30.06.2022 அன்று வரை)சென்னை            2893.45            1032.09கோவை            49.80            0மதுரை            99.02            0திருச்சி            1000.95            611.03தூத்துக்குடி        380.87            40.46

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.