மோடி, அமித்ஷா படங்களுடன் போஸ்டர்: ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் அதிரடி

காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்களால் மோடி, அமித்ஷா ஆகியோர் இடம் பெறும் வகையில் ஒட்டபட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  இது ஒரு புதிய சர்ச்சயை உருவாகி உள்ளது.

தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் பெரிதாக வெடித்தது. இரண்டு செயற்குழு நடத்தப்பட்டு இறுதியாக அதிகமுகவிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் நீக்கப்பட்டனர். பெரும்பான்மையான மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பக்கம் இருந்ததால், எடப்பாடி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.ஆனால் பன்னீர் செல்வம் தன்னை நீக்கியவர்களை தானும் நீக்குவதாக தெரிவித்தார். மேலும் புதிய நிர்வாகிகளை அறிவித்தார். இதனால் அதிமுக கட்சி மற்றும் அதன் சின்னம் யாருக்கு என்ற பிரச்சனையும் கிளம்பியது. ஓபிஎஸ் நீதிமன்றம் , தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து முறையிட்டும் வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு ஓபிஎஸ் சென்று, ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்முவை ஆதரித்தார். மேலும் அவர் உள்கட்சி பிரச்சனை தொடர்பாக பேசியிருக்கலாம் என்று கூறப்பட்டது.

மேலும் சமீபத்தில் நடந்த ராம்நாத் கோவிந்த் பிரிவு உபச்சார விழாவில் அண்ணாமலையுடன் எடப்பாடி கலந்துகொண்டார். ஆனால் அவர் புதிய குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளாமல் தமிழகம் திரும்பினார். அமித்ஷாவை சந்தித்து பேச நேரம் வழங்கப்பட வில்லை என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வுக்காக பிரதமர் தமிழகம் வந்துள்ளார். அதிமுக கட்சி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர் செல்வம் அவரை சந்திப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் ஓபிஎஸ்-யை  அமித்ஷா மற்றும் மோடி வாழ்த்துவதுபோல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சர்ச்சை உருவாகி உள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.