Samsung Galaxy: ஃபோன வாங்குனா போதும்; பணத்த அப்புறமா கொடுங்க – களத்தில் இறங்கிய சாம்சங்!

Galaxy Unpacked: சாம்சங் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இப்போது, “Buy Now Pay Later” சேவையை அறிவித்துள்ளது. இந்த சேவை சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ், மடிக்கக்கூடிய Fold 3, Flip 3 ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே நிறுவனம் வழங்குகிறது.

கொரிய நிறுவனமான சாம்சங் அதன் வருடாந்திர Unpacked 2022 நிகழ்வை சில நாள்களுக்குப் பிறகு ஆகஸ்ட் 10 அன்று நடத்துகிறது. நிறுவனம் தனது முதன்மை மற்றும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை இந்த நிகழ்வில் அறிமுகம் செய்கிறது.

5G Auction: 1800 MHz அலைக்கற்றைக்கு கடும் போட்டி; விலையை சற்று உயர்த்திப்பிடித்த அரசு!

இந்த சூழலில் தான், ‘Buy Now Pay Later’ சேவையை பயனர்களுக்காக அறிவித்துள்ளது. இந்தச் சேவையானது வாடிக்கையாளர்களை நிறுவனத்திடமிருந்து பிரீமியம் ஸ்மார்ட்போன்களை மிக எளிதாக வாங்க அனுமதிக்கும். சாம்சங்கின் புதிய சேவை ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயனர்களுக்காகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் அதிகபட்ச கடன் வரம்பு ரூ.1.5 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Buy now Pay later மூலம், வாடிக்கையாளர்கள் ஸ்மார்ட்போனின் மொத்தத் தொகையில் 60 விழுக்காட்டை 18 மாதங்களில் தவணை முறையில் செலுத்த முடியும் என்று சாம்சங் கூறுகிறது. அதே சமயம், மீதமுள்ள 40 விழுக்காடு தொகையை 19ஆவது தவணையாக செலுத்தலாம் என்றும் நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் விலை – Samsung Galaxy S22 Series Price

சாம்சங் கேலக்ஸி எஸ்22 போனின் 12ஜிபி ரேம், 256 ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.1,09,999 ஆக உள்ளது. அதே நேரத்தில், 12ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.1,18,999ஆகவும், 12ஜிபி ரேம், 1டிபி சேமிப்பு வகையின் விலை ரூ.1,34,999 ஆகவும் உள்ளன.

Google Street View: இனி உங்க வாழ்க்கைய ரொம்ப நிம்மதியா வாழலாம் – கூகுள் உங்களுக்கு வழிகாட்டும்!

இதே அடிப்படை மாடலான கேலக்ஸி எஸ்22 போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பின் விலை ரூ.72,999 ஆகவும், 8ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வகையின் விலை ரூ.76,999 ஆகவும் இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஃபோல்ட் 3 விலை – Samsung Galaxy Fold 3 Price

கேலக்ஸி ஃபோல்டு 3 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம், 256ஜிபி சேமிப்பு வேரியன்ட் விலை ரூ.1,39,999 ஆகவும், 12ஜிபி ரேம், 512ஜிபி சேமிப்பு சேரியன்ட் விலை ரூ.1,47,999 ஆகவும் உள்ளது.

இதே ஃபிளிப் 3 போனின் 8ஜிபி ரேம், 128ஜிபி சேமிப்பக மாறுபாடு ரூ.84,999-க்கும், 8ஜிபி ரேம், 256ஜிபி ஸ்டோரேஜ் மெமரி கொண்ட வகை ரூ.89,999க்கும் விற்பனைக்கு உள்ளது.

இந்த சேவையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் சாம்சங் போனை சொந்தமாக்கலாம். அதுவும், பிளாக்‌ஷிப் பிரீமியம் போன் என்றால் சும்மாவா!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.