எங்கள சீண்டினா நீங்க அவ்வளவுதான்… அமெரிக்கா, தென்கொரியாவுக்கு வட கொரியா வார்னிங்!

கொரியப் போரின் 69 ஆம் ஆண்டு நிறைவு நாள் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் போர் வீரர்கள் மத்தியில் வடகொரிய அதிபர் கிம்ஜாங் அன் ஆவேசமாகப் ஆற்றிய உரை:

எந்தவொரு நெருக்கடிக்கும் பதில் அளிக்கக்கூடிய முழுமையான நிலையில் வட கொரிய ராணுவம் உள்ளது.ஆயுதப்படைகள் இருக்கின்றன. அமெரிக்கா, தென்கொரியாவுடன் போர் ஏற்பட்டால் வடகொரியா அணு ஆயுதங்களைப் பயன்படுத்த தயங்காது. அமெரிக்கா தனது விரோதக் கொள்கைகளை நியாயப்படுத்துவதற்காக எங்களை பேய்த்தனமாக காட்டுகிறது.

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாட்டைதான், தென்கொரியா உடனான அதன் கூட்டு போர் பயிற்சிகள் காட்டுகின்றன. தென்கொரியாவின் புதிய அதிபர் யூன் சுக் யோல் மோதல் வெறிபிடித்தவராக இருக்கிறார்.

ஆனாலும், அமெரிக்காவும், தென்கொரியாவும் அஞ்சி நடுங்கும் அளவுக்கு ஆயுதங்களை வைத்துள் வடகொரியாவுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை பற்றி பேசுவது மிகவும் ஆபத்தானதாகும். அது தற்கொலை நடவடிக்கைக்கு சமமான செயலாகும்.

sri lanka emergency extend:தொடரும் அதிபர் ரணில் அதிரடி!

இதனை இரண்டு நாடுகளும் உணர்ந்து செயல்பட வேண்டும். இல்லையென்றால் நிலைமை மோசமாகிவிடும் என்று கிம்ஜாங் அன் அமெரிக்காவுக்கும், தென்கொரியாவுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தென்கொரியா, வட கொரியா இரு நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பகைக்கு தூபம் மூட்டுவதை போல, அமெரிக்கா தென்கொரியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருவதுடன் அதற்கு அவ்வபோது கூட்டு ராணுவ பயிற்சியையும் அளித்து வடகொரியாவை உசுப்பேத்தி வருகிறது.

Rishi Sunak: ‘தோற்பது உறுதி.. இருந்தாலும் கடைசி வரை போராடுவேன்’ – ரிஷி சுனக்

அமெரிக்கா -தென் கொரியாவின் இந்த பூச்சாண்டிக்கு பதிலடி தரும் விதத்தில், வடகொரியா அவ்வபோது அணு ஆயுத சோதனையை நடத்தி வருகிறது. இதன் காரணமாக கொரிய தீபகற்பம் எப்போதும் போர் பதற்றத்துடனே காணப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.