அதிபர் மாளிகையில் சுருட்டிய ரூ.38 லட்சம் கோர்ட்டில் ஒப்படைப்பு| Dinamalar

கொழும்பு:இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே மாளிகையில் கைப்பற்றப்பட்ட 38 லட்சம் ரூபாய், நீதிமன்றத்தில் ஒப்படைக்கப் பட்டது.

நம் அண்டை நாடான இலங்கை பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஆகியவற்றில் சிக்கி தவிக்கிறது.இவற்றால் பாதிக்கப்பட்ட மக்கள் கொதித்தெழுந்து, 9ம் தேதி அதிபர் மாளிகைக்குள் புகுந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடினர்.போராட்டம் தீவிரமானதை அறிந்த கோத்தபய, அங்கிருந்து தப்பி, மாலத் தீவு சென்று பின் சிங்கப்பூர் சென்றார்.

இந்நிலையில் கோத்தபய மாளிகையில் கண்டெடுத்த, 38 லட்சம் ரூபாயை, போராட்டக்காரர்கள் தந்து விட்டதாக கூறி, போலீசார், கொழும்பு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அப்போது மாஜிஸ்திரேட் திலினா கமகே பிறப்பித்த உத்தரவு:அதிபர் மாளிகையில் கிடைத்த பணத்தை மூன்று வாரங்களாக போலீசார் ஒப்படைக்காமல் இருந்தது ஏன் என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது.

இதனால், பணத்தை தாமதமாக ஒப்படைத்த காரணம் பற்றி, சிறப்பு புலனாய்வு இயக்குனர் தலைமையிலான குழு ஆராய, இன்ஸ்பெக்டர் ஜெனரல் உத்தரவிட வேண்டும். இந்த விசாரணைக்கு தேவையான உதவிகளை வழங்கி, ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு மாஜிஸ்திரேட் உத்தரவிட்டுஉள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.