EPFO News: உங்க பி.எஃப் அக்கவுண்டுக்கு இந்தத் தொகை வரப் போகுது; செக் பண்ணுங்க!

உங்களிடம் பிஎஃப் கணக்கு உள்ளதா? அப்படியென்றால் இந்தச் செய்தி உங்களுக்குதான். இபிஎஃப் (EPFO) சந்தாதாரர்கள் தங்கள் கணக்கில் ரூ.40 ஆயிரம் வட்டியாக பெற உள்ளார்கள். தங்களின் கணக்குகளில் ரூ.5 லட்சம் வைத்திருக்கும் அனைத்து சந்தாதாரர்களும் இந்தப் பணம் கிடைக்கவுள்ளது.
இதற்கு நீங்கள் யூஏஎண் (UAN) என்ற எண்ணை உருவாக்க வேண்டும். இதை உருவாக்குவது மிக எளிது. ஆது குறித்து பார்க்கலாம்.
1) முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface இணையதள முகவரிக்கு செல்லவும்.
2) பக்கத்தின் வலதுபக்கம் தொழிலாளர்களின் நேரடி யூஏஎண் ஒதுக்கீடு என்பதை தேர்வு செய்யவும்.
3) ஓடிபி உருவாக்கத்தை கொடுக்கவும் (Generate an OTP)
4) ஆதாரை இணைத்துள்ள செல்போன் நம்பருடன் இந்த ஒடிபியை ( OTP) உள்ளீட்டு சொடுக்கவும்
5) நீங்கள் ஏதேனும் தனியார் நிறுவனம், தொழிற்சாலை அல்லது நிறுவனத்தில் பணிபுரிகிறீர்களா?” என்பதன் கீழ் ஆம் என்பதைக் கிளிக் செய்யவும்.

6) வேலைவாய்ப்பு வகையை தேர்ந்தெடுக்கவும்.

7) உங்கள் ஆதார் ஐடி மற்றும் கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்ட பிறகு “OTP ஐ உருவாக்கு” என்பதைக் கிளிக் செய்யவும்.

8) பெறப்பட்ட OTP ஐ உள்ளிடவும்

9) இந்த கட்டத்தில், உங்கள் UAN உருவாக்கப்படும்.

10) UAN உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கும் அனுப்பப்படும்.

இந்த UAN எண், EPF  கணக்கின் இருப்பை சரிபார்க்கவும், EPF பணம் எடுக்க விண்ணப்பிக்கவும்,  PF கடனுக்கு எளிதாக ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் பயன்படுகிறது. இந்த செயல்முறைகள் விரைவாக முடிய உங்களின் ஆதார் எண் மட்டும் தேவை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.