ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப்பூ: திருப்பூரில் கண்டு ரசித்த பொதுமக்கள்

திருப்பூர்: திருப்பூரில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இரவில் மலரும் பிரம்ம கமலப் பூவை, பொதுமக்கள் ஆர்வத்துடன் ரசித்துச் சென்றனர்.

திருப்பூர் போயம்பாளையம் கங்கா நகரில் வசிப்பவர் அஸ்வின்.இவரது வீட்டில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டும், இரவில் மலரும்பிரம்ம கமலப் பூ நேற்று முன்தினம்இரவு மலர்ந்தது. இது 3 விதமானஇதழ்களைக் கொண்டு வெண்மையான நிறத்தில் அழகாக காணப்பட்டது. பொதுவாக இந்த மலர் ஜூலை மாதத்தில் இரவில் மலர்ந்து,சில மணி நேரங்களில் குவிந்துவிடும். இந்த பூவை, ‘நிஷாகந்தி’ என்றும் அழைப்பர். இந்த அபூர்வ வகை பூவை, அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான குழந்தைகள், பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

தாவரவியல் பேராசிரியர்கள் கூறும்போது, “தென் அமெரிக்காவின் மெக்சிகோ காடுகளை பிறப்பிடமாக கொண்ட இந்த செடி அங்கிருந்து உலகெங்கும் பரவியுள்ளது. இலங்கையில் இது சொர்க்கத்தின் பூ என்றும், ஐரோப்பாகண்டத்தில் பெத்லகேமின் நட்சத்திரம் என்றும் அழைக்கப்படுகிறது.தமிழகத்திலும் பரவலாக வளர்கிறது. இது கள்ளி இனத்தை சேர்ந்ததால், இதன் தண்டை வெட்டிவைத்தாலே வளரக்கூடியது” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.