நடுவானில் இன்ஜின் திடீர் மக்கர் ஜன்னல் கண்ணாடிகளில் விரிசல் என்ன தான் ஆச்சு! பறக்கும் தொழிலில் பயணிகள் பாதுகாப்பு கேள்விக்குறி

எல்லா பொதுத்துறை நிறுவனத்தையும் தனியாருக்கு தாரை வார்க்க வேண்டுமென்பதில் ஒன்றிய பாஜ அரசு குறியாக இருக்கிறது. இப்படி எல்லா துறையும் தனியார்மயமானால் சேவை என்ன மாதிரியாக இருக்கும் என்பதற்கு ஓர் உதாரணமாக இன்றைய விமானத்துறை திகழ்கிறது. கடந்த ஒரு மாதத்தில் நடுவானில் இன்ஜின் செயலிழத்தல், விமானியின் ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்படுதல், விமான விசிறிகள் செயல்படாமல் போதல், விமானத்தில் புகை ஏற்படுதல், தரை இறங்கும் போது இன்ஜின் தீப்பிடித்தல், விமான நிலையத்தில் நாய் குறுக்கே வருதல், விமானி அறையில் உயிருடன் புறா தங்கியிருத்தல் என 20க்கும் மேற்பட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது அல்லது அவசரமாக விமானம் தரை இறக்கப்பட்டுள்ளது. நல்ல வேளையாக இந்த சம்பவங்களில் எந்த பெரிய அசம்பாவிதமும் நடக்கவில்லை. என்றாலும் கூட, விமான பயணிகளின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாகி உள்ளது.* உண்மையில் என்ன பிரச்னை?விமான பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு, விமான போக்குவரத்து அமைச்சகத்தின் கீழ் செயல்படும் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையத்துக்கே (டிஜிசிஏ) உள்ளது. இந்த ஆணையம் தான், விமான நிறுவனங்களை அடிக்கடி ஆய்வு செய்து பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். அந்த வகையில், கோளாறுகள் ஏற்பட்ட தனியார் விமான நிறுவனங்களுக்கு டிஜிசிஏ நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டது. அதைத் தொடர்ந்து, அனைத்து கோளாறுகளுக்கும் விமான நிறுவனங்களின் பாதுகாப்பு கவனக்குறைவும், போதுமான பராமரிப்பின்மையும்தான் காரணம் என டிஜிசிஏ கண்டித்துள்ளது. உண்மையிலேயே, இந்திய விமான நிறுவனங்களில் என்ன பிரச்னை நிலவுகிறது?* தயங்கும் தனியார் நிறுவனங்கள்கொரோனாவால் மிகப்பெரிய அடி வாங்கியது விமான துறைதான். நாடுகளுக்கு இடையேயான விமான சேவை  ரத்து செய்யப்பட்டுள்ளதால், பல கோடி ரூபாய் இழப்பை விமான நிறுவனங்கள் சந்தித்தன. அந்த சமயத்தில் சிக்கன நடவடிக்கையாக தனியார் விமான நிறுவனங்கள் பல ஊழியர்களை பணியிலிருந்து நீக்கின.தற்போது கொரோனாவுக்குப் பிறகு மீண்டும் விமான சேவை சகஜ நிலைக்கு திரும்பிய போதிலும், செலவை கட்டுப்படுத்தும் விதமாக, அனுபவமிக்க, அதிக சம்பளம் கேட்கும் இன்ஜினியர்களை பணியமர்த்த விமான நிறுவனங்கள் தயங்குகின்றன. இப்படி செய்யாதது தவறு* பொதுவாக, ஒரு விமானம் பறக்க தகுதி வாய்ந்ததா என 3 கட்டமாக இன்ஜினியர்கள் ஆய்வு செய்து அனுமதி தர வேண்டும். அதன் பிறகே விமானம் தனது பயணத்தை தொடங்க வேண்டும். * அந்த வகையில், பி1 லைசென்ஸ் பெற்ற இன்ஜினியர்கள் விமானத்தின் இயந்திரங்களையும், பி2 லைசென்ஸ் பெற்ற இன்ஜினியர்கள் விமானத்தில் உள்ள மின்சாதன உபகரணங்களையும் பரிசோதிப்பார்கள். * இறுதியாக, ஏ லைசென்ஸ் பெற்ற இன்ஜினியர்கள் நடுவானில் விமானம் பறக்கும் போது கோளாறு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து, விமானம் பறக்க அனுமதி தருகின்றனர்.* இதில், தற்போது பெரும்பாலான விமான நிறுவனங்கள் பி1, பி2 இன்ஜினியர்களை வைத்தே ஆய்வுகளை செய்து விமானத்தை இயக்குகின்றன. அவர்களே விமானம் பறக்க தகுதியானவை என அனுமதிக்கின்றனர். * அதிக சம்பளத்தை காரணம் காட்டி ஏ லைசென்ஸ் இன்ஜினியர்கள் நியமிக்கப்படாததால், பெரும்பாலான கோளாறுகள் ஏற்படுகின்றன என்கின்றனர் விமான போக்குவரத்து அமைச்சக அதிகாரிகள்.* ஊழியர்கள் விரக்திஇதுமட்டுமல்ல, தனியார் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு போதுமான சம்பளத்தையும் தருவதில்லை என்ற குற்றச்சாட்டும் நிலவுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட குறிப்பிட்ட ஒரு விமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக விடுப்பு எடுத்துக் கொண்டு மற்றொரு விமான நிறுவனத்தின் ஆட்தேர்வில் பங்கேற்க சென்றது சர்ச்சையானது. விமான உபகரணங்களை மாற்றுவதிலும் மெத்தனப் போக்கு நிலவுகிறது.* அரசு நிவாரணம் இல்லைஇது குறித்து விமான நிறுவனங்கள் கூறுகையில், ‘கொரோனாவால் எங்களுக்கு ஏற்பட்ட பொருளாதார பாதிப்புக்கு அரசு எந்த நிவாரணமும் தரவில்லை. அதுமட்டுமின்றி, தற்போது விமான எரிபொருள் விலை அதிகரித்துக் கொண்டே போகிறது. விமானத்தை இயக்குவதற்காகும் செலவில் பாதி செலவு எரிபொருளுக்கே போகிறது. இதில் ஊழியர்களுக்கு அதிக சம்பளம் தர வேண்டும். ஆனால், குறைந்த விலைக்கு டிக்கெட் விற்க வேண்டும் என்றால் எப்படி கட்டுபடியாகும்? உலகிலேயே குறைவான விமான டிக்கெட் கட்டணம் கொண்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால், விமான தொழில் செய்வது மிகவும் சிரமமாகிறது. விமான நிலையங்களுக்கான கட்டணமும் அதிகரிப்பதால் செலவை ஈடுகட்ட, எங்களால் முடிந்த அளவுக்கு சிக்கன நடவடிக்கையை கையாள்கிறோம்,’ என்கின்றன. * பிரச்னையை தீர்க்க முயற்சிசிக்கன நடவடிக்கைக்காக விமான பயணிகளின் பாதுகாப்பில் சமரசம் செய்வதை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு ஒன்றிய அரசு எப்படி தீர்வு காணப் போகிறது? என்பதே விமானப் பயணிகளின் பெரும் கவலையாக இருக்கிறது. இருப்பினும், தனியார் விமானங்களை வழிக்கு கொண்டு வரும் வகையில், இந்த நிறுவன விமானங்களில் ஏற்படும் கோளாறுக்கான காரணங்களை கண்டறிய, தனிக்குழுவை விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு ஆணையம் அமைத்துள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு இந்த நேரடி ஆய்வு நடைபெற உள்ளது. * இனி யார் காப்பாற்றுவார்?கொரோனா காலகட்டத்தில், வெளிநாட்டில் சிக்கித் தவித்த பல ஆயிரம் இந்தியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு முக்கிய காரணமாக இருந்தது ஏர் இந்தியா விமானம்தான். மிகவும் இக்கட்டான அந்த சமயத்திலும், ஏர் இந்தியா விமானங்கள் மிக பத்திரமாக இயக்கப்பட்டு பலரை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றி தாய்நாட்டுக்கு அழைத்து வந்தது. இனி அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலை வந்தால், தற்போதுள்ள எந்த தனியார் விமான நிறுவனம் அரசுக்கு உதவ முன்வரும் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி உள்ளது. மிகக் குறைவான இந்தியர்களே விமான சேவையை பயன்படுத்தி வரும் நிலையிலேயே இவ்வளவு பிரச்னைகள் என்றால், இன்னும் ஒன்றிய அரசு சொல்வது போல் பட்டி, தொட்டி எல்லாம் விமான நிலையங்கள் வந்தால் அங்கு இயங்குவதற்கு பாதுகாப்பான விமானங்கள் இருக்குமா என்ற சந்தேகமும் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் பிரகாசமான எதிர்காலம் கொண்ட விமானத்துறை, அரசின் அலட்சியப் போக்காலும், தனியார் விமான நிறுவனங்களின் லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்ட கொள்கைகளாலும் பாழாய் போய்க் கொண்டிருப்பதாக விமானத்துறை நிபுணர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.* பைலட் பற்றாக்குறைஆண்டுதோறும் விமான சேவைத் துறைக்கு 1000 பைலட்கள் தேவைப்படும் நிலையில், 200 முதல் 300 பயிற்சி பெற்ற பைலட்களே கிடைப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுபோன்ற பற்றாக்குறையால் சில விமான நிறுவனங்கள் முறையான பயிற்சி பெறாதவர்களை பைலட்களாக நியமிக்கும் அபாயமும் நடக்கிறது.* பொருளாதாரத்திற்கு அவசியமான ஒன்று விமானங்கள் என்பது வெறும் போக்குவரத்து சாதனங்கள் மட்டுமல்ல. உலகமயமாக்கலுக்குப் பிறகு, நாட்டின் பொருளாதாரத்தில் விமான போக்குவரத்துக்கும் முக்கிய பங்குண்டு. விமான பயணத் தொடர்பும், அதன் பாதுகாப்பும், நம்பிக்கையும் முதலீடுகளை ஈர்க்க அவசியமாகிறது. அந்த வகையில், கடந்த ஒருமாதமாக நடக்கும் விமான கோளாறுகள் குறித்த செய்திகள், சர்வதேச நாடுகள் மத்தியில் இந்திய விமான நிறுவனங்கள் மீதான நம்பிக்கையை சற்றே குறைந்துள்ளது. * கொரோனா இழப்புகொரோனா காலகட்டத்தில் 2 ஆண்டு விமான சேவை பாதிக்கப்பட்டதால், இந்திய விமான நிறுவனங்கள் ரூ.15,086 கோடி இழப்பை சந்தித்துள்ளன.விமான நிறுவனம்    இழப்பு (கோடியில்)ஏர் இந்தியா    ரூ.4,700 இண்டிகோ    ரூ.5,829விஸ்தாரா    ரூ.1,609ஏர் ஏசியா    ரூ.1,396கோ எர்    ரூ.1,333* தண்ணி தொட்டி தேடி வந்த கன்னு குட்டிகள்விமான பயணிகளின் பாதுகாப்பு கருதி, விமான பைலட்கள் மற்றும் பணியாளர்கள் மது அருந்தி விட்டு பணிக்கு வரக்கூடாது என தடை விதிக்கப்பட்டது. இதற்காக, கடந்த 2019ம் ஆண்டில் இருந்து விமான பணியாளர்களுக்கு மூச்சு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கடந்த இரண்டரை ஆண்டில் இதுவரை 60 பைலட்கள் மற்றும் 150 விமான பணியாளர்கள் மூச்சு பரிசோதனையில் தோல்வி அடைந்துள்ளனர். அதாவது, மது குடித்து விட்டு பணிக்கு வருவது மிக சகஜமாக இருந்து வருகிறது. மூத்த விமானிகள் கூறுகையில், ‘‘தற்போதைய இளம் விமானிகள் அதிக சம்பளம் மற்றும் மது உள்ளிட்ட கேளிக்கையான விஷயங்களுக்காக இப்பணியை தேர்வு செய்கிறார்கள்’’ என கவலை தெரிவிக்கின்றனர்.3வது இடத்தில் இந்தியா* விமான போக்குவரத்தை பொறுத்தவரையில் உலகின் 3வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. * இந்தியாவில் 15 விமான நிறுவனங்கள் உள்ளன* ஆண்டுதோறும் 15 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர்.* ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் விமானங்கள் பறக்கின்றன.* 137 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.* அடுத்த 20 ஆண்டில் இந்த எண்ணிக்கைகள் 5 மடங்காகும் என விமான நிறுவனங்கள் கணித்துள்ளன.* அதற்கு இந்தியா தயாராக உள்ளதா என்பதே இப்போதைய கேள்வியாக உள்ளது.* எரிபொருள் எவ்வளவு?விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருளான ஏடிஎப் விலை ஒவ்வொரு மாதமும் 1ம் தேதியும் 16ம் தேதியும் மாற்றி அமைக்கப்படுகிறது. உக்ரைன் மீதான போரால் எரிபொருள் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டிருப்பதன் காரணமாக, சா்வதேச அளவில் எரிபொருள்கள் விலை உயா்ந்து வருகிறது. * கடந்த மாா்ச் 16ம் தேதி விமான எரிபொருள் விலை கிலோ லிட்டருக்கு 18 சதவீதம் அதாவது ரூ.17,135.63 உயா்த்தப்பட்டது. * பின்னர், கடந்த ஜூன் 16ம் தேதி  16 சதவீதம் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் டெல்லியில் ஒரு கிலோ லிட்டா் விமான எரிபொருள் விலை ரூ.19,757.13 உயா்ந்து ரூ.1,41,232.87க்கு விற்பனையானது. * இதைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்ததால், கடந்த 16ம் தேதி ஒன்றிய அரசு 2.2 சதவீதம் விலை குறைத்தது. இதனால் தற்போது ஒரு கிலோ லிட்டர் ஏடிஎப் விலை ரூ.1 லட்சத்து 38 ஆயிரத்து 147.93 ஆக உள்ளது. * விமான எரிபொருளையும் ஜிஎஸ்டியில் சேர்க்க வேண்டுமென விமான நிறுவனங்கள் வலியுறுத்துகின்றன.அடிப்படை பிரச்னைகள்* உலகிலேயே மிகக்குறைவான விமான டிக்கெட் கட்டணம்* உலகிலேயே மிக அதிகமான எரிபொருள் விலை* ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்* விமானிகள் பற்றாக்குறை* அனுபவமிக்க இன்ஜினியர்கள் பற்றாக்குறை* பாதுகாப்பு குறைபாடால் ஏற்படும் விளைவுகள்கடந்த 2007ம் ஆண்டு தொடர்ச்சியான பாதுகாப்பு குறைபாடுகளால் இந்தோனேஷிய நாட்டின் விமான நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. ஐரோப்பிய யூனியனின் எந்த நாட்டிற்கும் இந்தோனேஷிய விமானங்கள் பறக்க முடியாது. இதே போல, 2020ல் பாகிஸ்தானின் கராச்சியில் குடியிருப்பு பகுதியில் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதால், பிஐஏ விமான நிறுவனத்திற்கு ஐரோப்பிய யூனியன் தடை விதித்தது. இதுபோல, பாதுகாப்பு குறைபாடுகள் தொடரும் பட்சத்தில், இந்திய விமான நிறுவனங்களுக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட வாய்ப்புண்டு.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.