Infinix: 8ஜிபி ரேம் உள்ள போன் விலை இவ்வளவு தானா! இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ அறிமுகம்

Infinix Hot 12 Pro Flipkart: இன்பினிக்ஸ் நிறுவனம் தனது புதிய போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் பல சிறப்பம்சங்களைக் கொண்டுள்ளது. மொத்த இரண்டு வகைகளில் இந்த போன் வெளியிடப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக வரும் இந்த ஸ்மார்ட்போனில் 90Hz ரெப்ரெஷ் ரேட் கொண்ட திரை, 8ஜிபி ரேம், 50 மெகாபிக்சல் கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் என பல்வேறு அம்சங்கள் நிறைந்துள்ளன. புதிய இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் குறித்த கூடுதல் விவரங்களை தெரிந்துகொள்ளலாம்.

Xiaomi: சியோமி ஸ்மார்ட் கண்ணாடி; இனி ஸ்மார்ட்போன் வேலைகளை இது பார்த்துக்கொள்ளும்!

இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ விலை – Infinix Hot 12 Pro Price

லைட்சாபர் கிரீன், எலெக்ட்ரிக் ப்ளு ஆகிய இரு நிறங்களில் இந்த ஸ்மார்ட்போனை பயனர்கள் வாங்கலாம். இதன் 6ஜிபி + 64ஜிபி மாடல் விலை ரூ.10,999 ஆகவும், 8ஜிபி + 128ஜிபி மாடல் விலை ரூ.11,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

போனின் அசல் தொடக்க விலை ரூ.13,999 என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக சலுகையாக மேற்கூறப்பட்ட விலைகள் குறிப்பிட்ட மாடல்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இதுமட்டும் இல்லாமல், நிறுவனம் கூடுதலாக வங்கி சலுகைகளையும் இந்த போனுக்கு வழங்குகிறது.

மேலதிக செய்தி:
Budget 5G Phones: ரூ.15,000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சிறந்த 5ஜி போன்கள்!

அதன்படி, ஐசிஐசிஐ வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஸ்மார்ட்போனை வாங்கினால் கூடுதலாக 10% விழுக்காடு தள்ளுபடி கிடைக்கும். அந்தவகையில், இந்த போனின் அடிப்படை மாடலை வெறும் ரூ.9,999க்கு பயனர்கள் வாங்க முடியும்.

இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ அம்சங்கள் – Infinix Hot 12 Pro Specifications

புதிய இன்பினிக்ஸ் போனில் பெரிய 6.6 அங்குல எச்டி+ ஐபிஎஸ் எல்சிடி திரை உள்ளது. இதன் ரெப்ரெஷ் ரேட் 90Hz ஆக இருக்கும். இதன் டச் சேம்பிளிங் ரேட் 180Hz ஆகும். ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஸ்கின் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது.

ஸ்மார்ட்போனில் 8ஜிபி வரையிலான ரேமும், 128ஜிபி வரையிலான UFS2.2 ஸ்டோரேஜ் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது. ரேம் மெமரியை பொருத்தவரை நீட்டிக்கக்கூடியதாக இருக்கும். இதனை 13ஜிபி வரை நீட்டிக்க முடியும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போனை யுனிசோக் டி616 சிப்செட் இயக்குகிறது.

Jio Recharge: ஜியோ ரீசார்ஜுக்கு அமேசான் பே வழங்கும் ரூ.200 தள்ளுபடி!

இன்பினிக்ஸ் ஹாட் 12 ப்ரோ இரண்டு பின்பக்க கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. கேமரா அமைப்பின் அருகில் கைரேகை சென்சாரும் இடம்பெறும். செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

போனை சக்தியூட்ட 5,000mAh பேட்டரி வழங்கப்படும். இதனை ஊக்குவிக்க டைப்-சி வழியிலான 18W பாஸ்ட் சார்ஜிங் வசதி கிடைக்கும். போனின் எடை 191 கிராம் ஆகும்.

புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள Infinix Hot 12 Pro ஸ்மார்ட்போனை பயனர்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் ஷாப்பிங் தளத்தில் வாங்கலாம். இதற்கான அறிமுக சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Infinix-Hot-12-Pro விவரங்கள்முழு அம்சங்கள்ஃபெர்பார்மன்ஸ்MediaTek Helio G35சேமிப்பகம்128 GBபேட்டரி6000 mAhஇந்திய விலை14566டிஸ்பிளே6.6 inches (16.6 cm)ரேம்6 GBமுழு அம்சங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.