இந்திய சந்தையில் அறிமுகமானது ஒப்போ A77 ஸ்மார்ட்போன் | விலை and சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ நிறுவனத்தின் A77 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து பார்ப்போம்.

செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வரும் சீன தேச நிறுவனங்களில் ஒன்று ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். அதன் காரணமாக அவ்வப்போது புதுப்புது மாடல்களை ஒப்போ அறிமுகம் செய்து வருகிறது. இப்போது ஒப்போ நிறுவனத்தின் ‘ஏ’ சீரிஸ் போன்களில் ஒன்றான A77 4ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

இந்த போனை பயனர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு வண்ணங்களில் இந்த போன் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.56 இன்ச் திரை அளவு கொண்ட வாட்டர் நாட்ச் ஸ்டைல் டிஸ்பிளேவை கொண்டுள்ளது இந்த போன். இதன் ரெப்ரெஷ் ரேட் 60Hz.
  • ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 SoC சிப்செட் இந்த போனில் இடம் பெற்றுள்ளது.
  • 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்ன்ஸ் ஸ்டோரேஜ் திறனை இந்த போன் கொண்டுள்ளது.
  • ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இந்த போன் இயங்குகிறது.
  • பின்புறத்தில் இரண்டு கேமரா இடம் பெற்றுள்ளது. அதில் பிரதான கேமரா 50 மெகாபிக்சலை கொண்டுள்ளது. 8 மெகாபிக்சல் கொண்டுள்ளது செல்ஃபி கேமரா.
  • 5000mAh திறன் கொண்ட பேட்டரி இதில் இடம் பெற்றுள்ளது. 33 வாட்ஸ் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது இந்த போன்.
  • 4ஜி இணைப்பில் இயங்கும் இந்த போனின் விலை ரூ.15,499.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.