Nokia: வெறும் ரூ.4 ஆயிரம் பட்ஜெட்டில் நோக்கியாவின் 4ஜி போன்!

Nokia 8210 4G India Launch: நோக்கியா இறுதியாக அதன் புதிய பட்ஜெட் 4ஜி போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. பட்டன் போனான நோக்கியா 8210 4G பயனர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தது. ஆனால், இந்திய வெளியீட்டுக்காக நலம் விரும்பிகள் இதுவரை காத்திருந்தனர்.

நோக்கியாவின் இந்த அற்புதமான பட்டன் 4ஜி போன் இரண்டு வண்ணத் தேர்வுகளில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இரட்டை சிம் ஆதரவு உள்ளது. இது சீரிஸ் 30+ இயங்குதளம் வாயிலாக வேலை செய்கிறது. இதில் 3.8 இன்ச் QVGA டிஸ்ப்ளே உள்ளது.

புதிய நோக்கியா 4G போனில் ப்ளூடூத் 5.0, நிறுவனத்தின் பிரபலமான பாம்பு விளையாட்டு ஆகியவற்றுடன் வருகிறது. இந்த போனை குறித்த மேலும் பல தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.

Jio 5G: ஜியோ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி; மலிவு விலையில் 5ஜி திட்டங்கள் கிடைக்குமாம்!

Nokia 8210 4G Price in India – நோக்கியா 8210 4ஜி விலை

HMD Global நிறுவனம் நோக்கியா 8210 4ஜி பட்டன் போனை ரூ.3,999 விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொலைபேசி அடர் நீலம், சிவப்பு நிறத்தில் வருகிறது. புதிய நோக்கியா போனை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், ஆன்லைன் ஷாப்பிங் தளமான அமேசான் இந்தியா ஆகியவற்றில் இருந்தும், பிற சில்லறை விற்பனை கடைகளில் இருந்தும் வாங்கலாம். நோக்கியா பட்டன் போன் நிறுவனத்தின் ஒரு உத்தரவாதத்துடன் வருகிறது.

Nokia 8210 4G Features – நோக்கியா 8210 4ஜி அம்சங்கள்

நோக்கியா 8210 4ஜி பட்டன் போன் இரட்டை சிம் ஆதரவுடன் வருகிறது. இதில் 3.8 அங்குல QVGA டிஸ்ப்ளே உள்ளது. போனில் 128MB ரேம், 48MB ஸ்டோரேஜ் மெமரி கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு மூலம் ஃபோனின் சேமிப்பகத்தை 32ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

இந்த 4ஜி போன் யுனிசோக் டி107 (Unisoc T107) சிப்செட் கொண்டு இயங்குகிறது. இதில் சீரிஸ் 30+ (Series 30+) இயங்குதளம் நிறுவப்பட்டுள்ளது. நோக்கியா ஃபீச்சர் போனில் 0.3 மெகாபிக்சல் கேமரா சென்சார் உள்ளது. Nokia 8210 4G பவர் பேக்கப்பிற்காக சக்திவாய்ந்த 1450mAh பேட்டரியை பெற்றுள்ளது.

மேலதிக செய்தி:
Jio Recharge: தினசரி 2ஜிபி டேட்டா; ஓடிடி நன்மைகள் – ஜியோவின் சூப்பர் ப்ரீபெய்ட் திட்டங்கள்!

ஒருமுறை சார்ஜ் செய்தால் 27 நாள்கள் வரை தாங்கும் ஸ்டாண்ட்-பை நேரத்தை இந்த போன் வழங்குகிறது. எஃப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர், 3.5மிமீ ஹெட்போன் ஜாக், சார்ஜ் செய்ய மைக்ரோ யுஎஸ்பி போர்ட் ஆகிய இணைப்பு ஆதரவுகளும் இதில் அடங்கியுள்ளன.

இதனுடன், ஸ்னேக், டெட்ரிஸ், பிளாக் ஜாக் போன்ற கேம்களுடன் எல்இடி பிளாஷ் லைட்டும் உள்ளது. இந்த போனின் எடை மொத்தம் 107 கிராம். கைக்கு அடக்கமான, அதிக நேரம் பேட்டரி தாங்கும் போனை பயனர்கள் வாங்க நினைத்தால், Nokia 8210 4G நல்ல தேர்வாக இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.