நீலகிரி: நியாய விலைக்கடையில் நடக்கும் மோசடி – ஆதாரத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட இளைஞர்

கூடலூரில் உள்ள நியாயவிலை கடை ஒன்றில் சர்க்கரை 200 கிராம் அளவும், அரிசியை 700 கிராம் அளவு குறைத்துக் கொடுத்ததை இளைஞர் ஒருவர் ஆதாரத்துடன் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் நகரில், கள்ளிக்கோட்டை செல்லும் சாலையில் மகளிர் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் நேற்று மதியம் அப்பகுதியை சேர்ந்த முகமது மன்சூர் என்பவர் மனைவி சர்க்கரை, அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வாங்கி சென்று இருக்கிறார். வாங்கப்பட்ட பொருட்களின் எடை குறைவாக இருந்ததால் சந்தேகம் அடைந்த மன்சூர் பொருட்களின் எடையை சோதனை செய்து பார்த்துள்ளார். அப்போது சர்க்கரை இரண்டு கிலோவுக்கு பதிலாக 1.800 கிராம் மற்றும் அரிசி 700 கிராம் குறைவாக இருந்துள்ளது. வாங்கிய பொருட்களை நேரடியாக கடைக்கு எடுத்து வந்தாக நியாய விலை கடை பணியாளர்கள் முன்பே அவர்களது தராசில் வைத்து எடை குறைவாக இருந்ததை சுட்டிக்காட்டி இருக்கிறார்.

கடை ஊழியர்களோ தராசில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக எடை குறைந்து இருப்பதாக கூறினர். அப்போது அருகில் உள்ள கடை ஒன்றிலிருந்து 1 கிலோ சர்க்கரை வாங்கி வந்து நியாய விலை கடையில் உள்ள தராசில் எடைபோட்டு பார்த்தபோது சரியான எடை காட்டி இருக்கிறது. இதனை அடுத்து நியாயவிலை கடை ஊழியர்கள் 200 கிராம் சர்க்கரையை சேர்த்து வாங்கி கொள்ள கூறி உள்ளனர். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ளாத மன்சூர் நடந்த சம்பவங்களை வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதையும் படிக்க: காதலை கண்டித்ததால் பேராசிரியர் மீது தாக்குதல்: 4 மாணவர்கள் மீது வழக்குப்பதிவுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.