இலங்கை வழியில் செல்லும் வங்க தேசம்; எரிபொருள் விலைகள் 51% அதிகரிப்பு

பங்களாதேஷில் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் மற்றொரு பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. நேற்று இரவு பெட்ரோல்-டீசல் விலை 51.7 சதவீதம் உயர்த்தப்பட்டது. இது, நாட்டின் வரலாற்றில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய எரிபொருட்களின் விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஏற்கனவே பணவீக்கத்தை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு இது பேரிடியாக அமைந்துள்ளது. மதியம் 12:00 மணி முதல் அமலுக்கு வந்த புதிய விலையின்படி, ஒரு லிட்டர் ஆக்டேன் விலை தற்போது 135 டாக்காவாக மாறியுள்ளது, இது முந்தைய விலையான 89 டாக்காவை விட 51.7 சதவீதம் அதிகமாகும். இப்போது வங்கதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இப்போது 130 டாக்காவாக உள்ளது, அதாவது நேற்று இரவு முதல் 44 டாக்கா அல்லது 51.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து மின்சக்தி, எரிசக்தி மற்றும் கனிம வள அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிப்பு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பங்களாதேஷ் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் பிப்ரவரி மற்றும் ஜூலை இடையே குறைந்த விலையில் எரிபொருளை விற்றதால் 8,014.51 டாக்கா  நஷ்டத்தை சந்தித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக இந்தியா உட்பட பல நாடுகள் ஏற்கனவே இந்த முடிவை எடுத்துள்ளதாக அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அணுமின் நிலையத்தின் மீதான தாக்குதல் நடத்தியது உக்ரைனா ரஷ்யாவா?

பங்களாதேஷ் தனது அந்நியச் செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் முயற்சிகளுக்கு மத்தியில் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) ஆகியவற்றிடம் இருந்து $2 பில்லியன் கடன் கோருகிறது. பங்களாதேஷின் $416 பில்லியன் பொருளாதாரம் பல ஆண்டுகளாக உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரமாக கூறப்பட்ட போதிலும், ரஷ்ய-உக்ரைன் போரின் காரணமாக எரிசக்தி மற்றும் உணவு விலைகள் உயர்ந்து அதன் இறக்குமதிக்கான அன்னிய செலாவணி பற்றாக்குறை  மற்றும் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளன.

அந்த அறிக்கையில், அரசாங்கம் ADB மற்றும் உலக வங்கிக்கு 1 பில்லியன் டாலர் கோரி கடிதம் எழுதியுள்ளது. அதே நேரத்தில், கடந்த வாரம்தான், வங்கதேசத்தின் கடன் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று ஐஎம்எஃப் கூறியது. பங்களாதேஷ் ஊடகங்கள் சில நாட்களுக்கு முன்பு ஒரு அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இருந்து $4.5 பில்லியன் தேவை என்று கூறியது, இதில் பட்ஜெட் மற்றும் இருப்புத் தொகை ஆதரவு ஆகியவை அடங்கும். பங்களாதேஷின் ஜவுளித் தொழில் சீனாவிற்கு அடுத்தபடியாக உலகின் நம்பர் 2 ஏற்றுமதியாளராக உள்ளது. ஃபேஷன் பிராண்ட் Tommy Hilfiger-ன் நிறுவனம் PVH Corp மற்றும் Inditex SA-ன் Zara சப்ளையர் Plumie Fashion Ltd ஆகியவை ஜூலை மாதத்தில் புதிய ஆர்டர்களைப் பெற்றன. என்றாலும் இது கடந்த ஆண்டை விட 20% குறைந்துள்ளது.

வங்க தேசம் 1971ல் சுதந்திரம் அடைந்த பிறகு முதல்முறையாக எரிபொருள் விலை உச்சத்தை எட்டியுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையை போன்று வங்க தேசமும் நெருக்கடி நிலையை நோக்கி செல்கிறதோ என்ற கவலை அதிகரித்துள்ளது. 

மேலும் படிக்க |  ரஷ்ய தாக்குதலில் உக்ரைனின் முக்கிய தொழிலதிபர் பலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.