நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..

சென்னை:  டிஎன்பிஎஸ்சி மூலம் நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறைக்கு தேர்வான நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை நடைபெற்ற நிகர்ச்சியில்,  நெடுஞ்சாலை, பொதுப்பணித்துறையில் இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். நெடுஞ்சாலைத் துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணிநியமன ஆணைகள் மற்றும், பொதுப்பணித் துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர் (சிவில்) பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு  தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.

இதுதொடர்பாக தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒருங்கிணைந்த பொறியியல் சார்நிலை பணி தொகுதியின் கீழ் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன. அதன்படி, நெடுஞ்சாலைத்துறையில் 181 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இதேபோல், பொதுப்பணித்துறையில் 144 இளநிலை வரைதொழில் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, துறை உயர் அலுவலர்கள், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர். தொடர்ந்து, கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் சிறந்து விளங்கும் கைத்தறி நெசவாளர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

2021-22ம் ஆண்டுக்கான மாநில அளவில் பட்டு மற்றும் பருத்தி ரகங்களுக்கான சிறந்த கைத்தறி நெசவாளர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. சிறந்த கைத்தறி ஏற்றுமதியாளர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 3 விருத்தாளர்களுக்கு கேடயங்களையும், பாராட்டு சான்றிதழையும் முதலமைச்சர் வழங்கினார்.  நிகழ்ச்சியில் கைத்தறித்துறை அமைச்சர் எம்.ஆர்.காந்தி,  துறை உயர் அலுவலர்கள் பங்கேற்றுள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.