சீனாவில் வேலை இழந்த 10,000 ஊழியர்கள்..!- என்ன காரணம் தெரியுமா..?

உலக அளவில் தொழிலில் முக்கிய பங்கு ஆற்றும் நாடு சீனா. இந்நிலையில் சீனாவில் உள்ள அலிபாபா நிறுவனத்தில் சுமார் 10,000 ஊழியர்கள் வேலையிழக்க உள்ளனர்.

ஜூன் மாதத்தில் நிகர வருமானத்தில் 50 சதவீதம் சரிவை அலிபாபா தெரிவித்ததை அடுத்து இந்த பணிநீக்கங்கள் வந்துள்ளன. மந்தமான விற்பனை மற்றும் நாட்டின் பொருளாதாரம் மந்தமான நிலையில் செலவுகளைக் குறைக்கும் முயற்சி இது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 9,241 ஊழியர்களை விடுவித்துள்ளது.

அதாவது நிறுவனத்தின் ஜூன் மாத நிகர வருவாயில் 50% குறைவு ஏற்பட்டதால் இந்த நடவடிக்கை என்று பல்வேறு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளன. சீனாவில் பொருளாதாரம் மந்தகதி அடைந்து வருவதால் விற்பனை கடும் மந்தமாக உள்ளதால் செலவினங்களைக் குறைக்க 10,000 பேரை சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்பியுள்ளது அலிபாபா.

வெளியாகியுள்ள அறிக்கைகளின் படி, நிறுவனம் அதன் ஒட்டுமொத்த பணியாளர்களின் எண்ணிக்கையை சுமார் 2,45,700 ஆகக் குறைத்துள்ளது. ஜூன் காலாண்டில் நிகர வருவாயில் 50 சதவீதம் சரிவை 3.4 பில்லியன் என்று நிறுவனம் அறிவித்தது. இது கடந்த ஆண்டு இதே காலத்தில் 45.14 பில்லியன் இருந்து குறைந்துள்ளது.
ஹாங்காங் பங்குச் சந்தையில் அலிபாபா பங்குகளின் விலை 4% அதிகரிப்புடன் தொடங்கியது. ஆனால் இவ்வளவு முதலீட்டு பலாபலன்கள் இருந்தும் அலிபாபா 10,000 பணியாளர்களை நீக்கியது ஏன் என்பதே வர்த்தக உலகின் கேள்வியாக உள்ளது.

அலிபாபா 1999 இல் நிறுவப்பட்டது. 2015 இல் டேனியல் ஜாங்கிற்கு தலைமை நிர்வாக அதிகாரியாக மா பதவியை வழங்கிய போது நிறுவனம் ஒரு பெரிய மறுசீரமைப்பைச் செய்தது. மேலும் அவரை 2019 இல் தலைவராக நியமித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.