ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்…ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு


  • ரஷ்ய நிலக்கரிக்கு முற்றிலுமாக தடை
  • 8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள வர்த்தகம் பாதிப்பு

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தி உள்ளனர்.

கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தொடங்கிய உக்ரைன் ரஷ்யா போரைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிரான பல்வேறு பொருளாதார நடவடிக்கையை முடுக்கி விட்டுள்ளனர்.

அந்த வகையில் பல ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிரான பல அடுக்கு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது.

ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்...ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு | Eu Uk Have Completely Stopped Buying Russian CoalTASS

இதற்கு பதிலடி  தரும் வகையில் ரஷ்யாவும் தங்களது நிலக்கரி மற்றும் எரிவாயு ஏற்றுமதியை மிகவும் குறைவான அளவிற்கு குறைத்துள்ளது .

இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா ஆகியவை ரஷ்யாவிடமிருந்து பெரும் நிலக்கரியை முற்றிலுமாக நிறுத்தி உள்ளன .

கூடுதல் செய்திகளுக்கு: சிங்கப்பூரில் இருந்து வெளியேறி…மற்றொரு ஆசிய நாட்டிற்கு செல்லும் கோட்டாபய ராஜபக்ச!

ரஷ்ய நிலக்கரி இறக்குமதி நிறுத்தம்...ஐரோப்பிய நாடுகள் மற்றும் பிரித்தானியா அதிரடி முடிவு | Eu Uk Have Completely Stopped Buying Russian Coal

ஐரோப்பிய ஆணையத்தின் மதிப்பீட்டின்படி, ரஷ்யாவுக்கு எதிரான பொருளாதார தடையானது ஆண்டுக்கு 8 பில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ரஷ்ய நிலக்கரி ஏற்றுமதியில் 25 சதவீதம் வரை பாதிக்கும் என தெரியவந்துள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.