"ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி பாகிஸ்தானை வீழ்த்தும்" – ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 20 ஓவர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. இதில் ஒரே பிரிவில் அங்கம் வகிக்கும் பரம போட்டியாளர்களான இந்தியாவும், பாகிஸ்தானும் 28-ந்தேதி துபாயில் லீக் சுற்றில் மோதுகின்றன.

அதன் பிறகு சூப்பர்-4 சுற்றிலும் இவ்விரு அணிகளும் சந்திக்க உள்ளன. கணிப்புபடி எல்லாம் சரியாக நகர்ந்தால் இறுதிப்போட்டியிலும் இந்தியா-பாகிஸ்தான் பலப்பரீட்சை நடத்த வேண்டி வரும். இந்நிலையில் ஆசிய கோப்பை தொடரை இந்தியா வெல்லும் என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஐசிசி நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த ரிக்கி பாண்டிங் கூறுகையில்,

இந்த ஆசிய கோப்பை தொடரை இந்திய அணி வெல்லும் என கூறினார். மேலும், ஆசிய கோப்பையை வெல்லும் வடிவிலான அணி கட்டமைப்பு இந்திய அணிக்கு உள்ளது என்றும், ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும் எனவும் கூறியுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.