கிரிமியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிக்குண்டு விபத்து…உக்ரைனில் பகிரப்படும் ரகசிய அறிக்கை


  • கிரிமியாவில் நடைபெற்ற தாக்குதலை ஒப்புக் கொண்ட உக்ரைன்
  • நாசவேளைகளின் விளைவு என ரஷ்ய மறைமுக குற்றச்சாட்டு

ரஷ்யாவின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் கிரிமியாவில் நடத்தப்பட்ட மூன்று பயங்கரமான தாக்குதலுக்கும் தாங்கள் தான் காரணம் என உக்ரைன் ஒப்புக் கொண்டுள்ளது.

2014ம் ஆண்டு ரஷ்ய படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட கிரிமியா மாகாணத்தில் கடந்த செவ்வாய் கிழமை ரஷ்ய ராணுவ வசதிகளை உலுக்கிய மூன்று குண்டுவெடிப்புகளுக்கும் உக்ரைன் தான் காரணம் என அந்த நாட்டி அதிகாரி ஒருவர் CNN செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் ஆகஸ்ட் 9ம் திகதி சாகி விமான தளத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது ஏழு இராணுவ விமானங்களை அழித்ததுடன், தளத்தை கடுமையாக சேதப்படுத்தியது மற்றும் இவற்றில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

கிரிமியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிக்குண்டு விபத்து...உக்ரைனில் பகிரப்படும் ரகசிய அறிக்கை | Crimea Explosions Russia Ukraine

மேலும் ஆகஸ்ட் 16ம் அன்று Maiske இல் உள்ள வெடிமருந்துக் கிடங்கிலும் Gvardeyskoe இல் உள்ள விமானநிலையத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டது.

அதனைப் போன்றே இந்த தாக்குதலில் விமானத் தளத்தில் வெடிப்பு மற்றும் பல விமானங்களை அழித்தது என உக்ரைனிய அரசாங்க அறிக்கை உள்நாட்டில் பரப்பப்பட்டு பகிரப்பட்டு வருகிறது என பெயர் வெளியிட முடியாத உக்ரைனிய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்தைத் தொடர்ந்து உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஆற்றிய உரையில், போர் கிரிமியாவுடன் தொடங்கியது, கிரிமியாவுடன் முடிவடைய வேண்டும் – அதன் விடுதலை என தெரிவித்தார்.

கிரிமியாவில் அடுத்தடுத்து நடந்த வெடிக்குண்டு விபத்து...உக்ரைனில் பகிரப்படும் ரகசிய அறிக்கை | Crimea Explosions Russia Ukraine

கூடுதல் செய்திகளுக்கு: சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ…குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ

ஆனால் இந்த தாக்குதல் எவற்றிக்கும் ரஷ்யா உக்ரைனை காரணம் எனத் தெரிவிக்காத நிலையில், மைஸ்கேயில் நடந்த சம்பவம் நாசவேலையின் விளைவாகும் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.