ராக்கெட்ரி படத்திற்காக வீட்டை இழந்தாரா மாதவன்?…தீயாய் பரவும் தகவல்

சென்னை
:
இந்தி,
கன்னட
படங்கள்,
விளம்பரங்கள்,
டிவி
தொடர்களில்
நடித்து
வந்த
மாதவன்,
மணிரத்னம்
இயக்கிய
அலைபாயுதே
படத்தின்
மூலம்
ஹீரோவானவர்.
1990
களில்
சினிமா
உலகில்
சாக்லேட்
பாயாகவும்,
இளம்
பெண்களின்
ட்ரீம்
பாயாகவும்
வலம்
வந்தவர்.

பல
மொழிகளில்
பல
படங்களில்
நடித்த
மாதவன்,
ராக்கெட்ரி
தி
நம்பி
எஃபெக்ட்
படத்தின்
மூலம்
டைரக்டராக
அவதாரம்
எடுத்தார்.
இந்த
படத்தை
இயக்கி,
தயாரித்து,
தானே
நடித்திருந்தார்
மாதவன்.

இந்த
படத்தில்
இஸ்ரோ
விஞ்ஞான
நம்பி
நாராயணன்
ரோலில்
நடித்திருந்தார்
மாதவன்.
இவரது
மனைவி
ரோலில்
சிம்ரன்
நடித்திருந்தார்.
இந்த
படத்தை
ரசிகர்கள்
மட்டுமின்றி
பிரபலங்கள்,
அரசியல்
தலைவர்கள்
உள்ளிட்ட
பலரும்
பாராட்டி
இருந்தனர்.

வீட்டை
இழந்தாரா
மாதவன்?

இந்த
சமயத்தில்
ராக்கெட்ரி
படத்தால்
பெரும்
நஷ்டம்
ஏற்பட்டதாகவும்,
இதை
சமாளிப்பதற்காக
மாதவன்
தனது
வீடு,
சொத்துக்கள்
போன்றவற்றை
இழந்ததாக
இன்ஸ்டாகிராமில்
ரசிகர்
ஒருவர்
பதிவிட்டார்.
இந்த
தகவல்
சோஷியல்
மீடியாவில்
தீயாய்
பரவி
வருகிறது.

இதெல்லாம் எப்போ நடந்தது

இதெல்லாம்
எப்போ
நடந்தது

வேறு
வேலைகள்
காரணமாக
ராக்கெட்ரி
படத்தின்
ஒரிஜினல்
டைரக்டர்
கடைசி
நிமிடத்தில்
படத்தில்
இருந்து
விலகியதாகவும்,
இதனால்
பெரும்
செலவு
ஏற்பட்டு,
நஷ்டம்
ஏற்பட்டதாகவும்
தகவல்
வெளியானது.
அதே
சமயம்
மாதவனின்
மகன்
வேதாந்த்,
நீச்சல்
போட்டியில்
பதக்கங்கள்
வென்று
நாட்டிற்கு
பெருமை
சேர்த்ததையும்
அந்த
ரசிகர்
குறிப்பிட்டிருந்தார்.

இப்படியெல்லாம் சொல்லாதீங்க

இப்படியெல்லாம்
சொல்லாதீங்க

ரசிகரின்
இந்த
பதிவிற்கு
மாதவன்
தனது
ட்விட்டர்
பக்கத்தில்
விளக்கமாக,
பதிலளித்துள்ளார்.
அதில்,
தயவு
செய்து
இது
போல்
என்னுடைய
தியாகத்தை
மிகைப்படுத்தி
சொல்லாதீர்கள்.
எனது
வீட்டையோ
அல்லது
மற்ற
எதையோ
நான்
இழக்கவில்லை.உண்மையில்
சொல்ல
வேண்டுமானால்
ராக்கெட்ரி
படத்தில்
பணியாற்றியவர்கள்
அனைவரும்
இந்த
ஆண்டு
அதிக
வருமான
வரி
செலுத்த
போகிறார்கள்
என்பதை
பெருமையாக
சொல்கிறேன்.

நான் பெருமையாக சொல்வேன்

நான்
பெருமையாக
சொல்வேன்

கடவுள்
அருளால்
நாங்கள்
அனைவரும்
நன்றாக
பணியாற்றி,
நல்ல
லாபம்
பார்த்துள்ளோம்.
நான்
இப்போதும்
சந்தோஷமாக
எனது
வீட்டில்
தான்
வசித்து
வருகிறேன்
என
குறிப்பிட்டுள்ளார்.
மாதவன்
பற்றி
தவறான
தகவல்
தெரிவித்த
அந்த
ரசிகரின்
ட்வீட்டையும்
பலர்
ரீ
ட்வீட்
செய்து
வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.