வெற்றியை வேற லெவலில் கொண்டாடி அதகளப்படுத்திய விருமன் டீம்

சென்னை : கொம்பன் பட டைரக்டர் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படம். இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டைன்மென்ட் தயாரித்திருந்தது.

கார்த்தி, அதிதி ஷங்கர், பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சரண்யா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சென்டிமென்ட், ஆக்ஷன், காமெடி கலந்த படமாக விருமன் உருவாக்கப்பட்டது.

‘விருமன்’ விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் புதிய சாதனை படைத்து வருகிறது. படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவை சேர்ந்த அனைவருக்கும் படத்தின் விநியோகஸ்தர் சக்திவேலன் பரிசு வழங்கி கெளரவித்தார்.

இதனால் படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன், படத்தின் நாயகன் கார்த்தி, படத்தின் தயாரிப்பாளர் சூர்யா, படத்தின் இணை தயாரிப்பாளர் ராஜசேகர் பாண்டியன் ஆகியோருக்கு வைரத்தினாலான காப்பை பரிசாக வழங்கி மகிழ்ந்தார். அத்துடன் ‘விருமன்’ படத்தை இயக்கிய இயக்குநர் முத்தையாவிற்கு வைர மோதிரத்தை பரிசளித்து கௌரவித்தார்.

‘விருமன்’ படம் வெளியான ஐந்து நாட்களில் உலக அளவில் 40 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து, வசூல் சாதனை படைத்து வருகிறது. இதனை கொண்டாடும் வகையில் சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. படத்தை தமிழகம் முழுவதும் வெளியிட்டிருக்கும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் வைரக்காப்பினை பரிசாக அளித்தார்.

விருமன் படம் கடந்த 6 நாட்களில் உலகம் முழுவதும் 42.64 கோடியையும், தமிழகத்தில் மட்டும் 37.04 கோடியையும் பெற்றுள்ளது. 2022 ம் ஆண்டில் ரிலீசான படங்களில் தமிழகத்தில் அதிகம் வசூலித்த படங்களின் பட்டியலில் விருமன் 8வது இடத்தில் உள்ளது.

நடிகர் சூர்யா ‘விக்ரம்’ படத்தில் நடித்ததற்காக கமல்ஹாசன் விலையுயர்ந்த ரோலக்ஸ் கைகடிகாரத்தை பரிசாக பெற்றிருந்தார். தற்போது ‘விருமன்’ படத்திற்காக விநியோகஸ்தர் சக்திவேலனிடமிருந்து வைர காப்பினை பரிசாக பெற்றிருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.விக்ரம் படத்திற்காக தயாரிப்பாளர் கமல், டைரக்டர் லோகேஷ் கனகராஜிற்கு காஸ்ட்லி கார் பரிசளித்தார். ஆனால் அவரையே மிஞ்சும் அளவிற்கு விருமன் விநியோகஸ்தர் படக்குழுவினருக்கு வைரத்தில் பரிசளித்துள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.