அரவிந்த் கெஜ்ரிவாலின் புதிய திட்டம்..! – “மேக் இந்தியா நம்பர் 1”

மத்திய அரசை எதிர்த்து அரசியல் செய்பவர்களில் முக்கிய தலைவராக திகழ்பவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அவ்வப்போது அவரின் அறிவிப்புகளும் திட்டங்களும் பலரது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது. இந்நிலையில் மிஸ்டுகால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் திடீரென துணை முதல்வர் வீட்டில் சிபிஐ அதிரடியாக சோதனை செய்தது. இந்த நிலையில் இந்தியாவை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல “மேக் இந்தியா நம்பர் 1”என்ற திட்டத்தை கெஜ்ரிவால் அறிவித்துள்ளார் .

இதன் மூலம் இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல மிஸ்டுகால் கொடுக்க வேண்டும் என்றும், இந்தியா நம்பர் ஒன் பணியில் சேர வேண்டும் என மக்களுக்கு அவர் அழைப்பு 9510001000 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் இந்தியா வலிமையான நாடாக மாறிவிடும் என்றும் கேஜ்ரிவால் அறிவித்தார்.

https://tamil.samayam.com/latest-news/state-news/it-is-expected-that-disciples-may-be-involved-in-the-effort-to-bring-nithyananda-to-india/articleshow/93666350.cms

“சுகாதாரம், கல்வி, விவசாயம் மற்றும் வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் நிலையான கவனத்தை செலுத்தி இந்தியாவை மீண்டும் நம்பர் 1 ஆக்கலாம்” என்று அவர் தெரிவித்துள்ளார். “நம் இந்திய நாட்டை மீண்டும் உலகின் ‘நம்பர் 1’ நாடாக மாற்ற வேண்டும். அந்த நோக்கத்தில் ‘மேக் இந்தியா நம்பர் 1’ என்ற தேசிய வளர்ச்சிக்கான திட்டத்தை இன்று தொடங்கி உள்ளோம். நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் இந்தத் திட்டத்தில் இணைந்து, அதன் இலக்கினை அடைய பணியாற்ற வேண்டியது அவசியம்” என கெஜ்ரிவால் பேசினார்.

“நாட்டின் விடுதலைக்குப் பின்னர் பல சாதனைகளை இந்தியா படைத்துள்ளது. இருந்தாலும் அவை அனைத்தும் இந்திய விடுதலைக்குப் பின்னர் விடுதலை அடைந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது சற்று பின்தங்கி இருக்கிறது” என்றார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த அறிவிப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.