குற்றம் சாட்டப்பட்டவர்களில் முதல் நபராக டெல்லி துணை முதல்வர்..!- சிபிஐ பரபரப்பு தகவல்..!!

டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா வீட்டில் சிபிஐ விசாரணை செய்துள்ளது. ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கல்வி திட்டம் குறித்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் இடம் பெற்ற பிறகுதான் சிபிஐ மணீஷ் சிசோடியாவின் வீட்டிற்கு வந்ததாக குற்றம் சாட்டினார்.சிபிஐ கடந்த ரெய்டுகளில் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இன்று எதையும் கண்டுபிடிக்க முடியாது என்று ஆம் ஆத்மி கட்சியின் பிரதிநிதி ராகவ் சத்தா கூறியிருந்தார்..

இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட 15 பெயர் பட்டியலில் முதல் இடத்தில் மனிஷ் சிசோடியா பெயர் உள்ளது. இதில் ஒன்பது மாதங்களாக அமல்படுத்தப்பட்ட மதுக் கொள்கையில் தொடர்புடைய கலால் அதிகாரிகள் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

சிபிஐ வெளியிட்டுள்ள இந்த 11 பக்க ஆவண பட்டியலில் அப்போதைய கலால் ஆணையர் ஆர்வ கோபி கிருஷ்ணா உட்பட 3 அதிகாரிகள் உள்ளனர். சிசோடியாவும் மற்றவர்களும் “2021-22 ஆம் ஆண்டிற்கான கலால் கொள்கை தொடர்பான முடிவுகளை, தகுதிவாய்ந்த அதிகாரிகளின் ஒப்புதல் இல்லாமல், டெண்டருக்குப் பிந்தைய உரிமதாரர்களுக்கு தேவையற்ற சலுகைகளை வழங்கும் நோக்கத்துடன் பரிந்துரை செய்வதிலும், முடிவுகளை எடுப்பதிலும் கருவியாக இருந்தனர்” என்று சிபிஐ தரப்பில் ஆப்பிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக ஆம் ஆத்மி கட்சியின் அடுத்த கட்ட தலைவராக இருக்கும் சிசோடியா மீது சிபிஐ இன்று காலை சோதனைகளை நடத்தியது. தலைநகரில் அவரது கல்வி திட்டத்திற்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் பாராட்டுக்களை பெற்றதால் சிசோடியா குறி வைக்கப்பட்டதாக ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது. நியூயார்க் டைம்ஸ் சில தினங்களுக்கு முன்பாக தனது முதல் பக்கத்தில் சிசோடியா பற்றிய கட்டுரையை வெளியிட்டது.

கெஜ்ரிவாலின் உயரும் தேசிய அந்தஸ்து குறித்த பதட்டத்தால் பிஜேபியும் பிரதமர் நரேந்திர மோடியும் ஆம் ஆத்மி மீதி விசாரணை அமைப்புகளை கொண்டு ஒடுக்க முயன்று வருவதாக சத்தா கூறினார்.. கலால் துறை அமைச்சராக இருக்கும் சிசோடியா, டெல்லியில் மத்திய அரசின் பிரதிநிதியான லெப்டினன்ட் கவர்னரின் அனுமதியின்றி யார் மது விற்கலாம் என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியதாக சிபிஐ தனது அறிக்கையில் கூறுகிறது. புதிய கொள்கை நவம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் விசாரணை அறிவிக்கப்பட்ட பின்னர் ஜூலை 30 அன்று திரும்பப் பெறப்பட்டது.

இந்த சம்பவம் இந்திய அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.