டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சி – மணீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

புதுடெல்லி,

டெல்லி துணை முதல்-மந்திரி மனிஷ் சிசோடியா வீட்டில் காலை முதல் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். மதுபான உரிமம் வழங்குவதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. மணிஷ் சிசோடியாவின் வீடு உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வந்த நிலையில், 14 மணி நேர சோதனைக்கு பிறகு டெல்லி துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா வீட்டில் இருந்து சிபிஐ அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர்.

இந்தநிலையில், டெல்லி துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

டெல்லி அரசின் நல்ல செயல்களை தடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கவில்லை. எனது கணினி, தொலைபேசி மற்றும் சில கோப்புகளை சிபிஐ கைப்பற்றியுள்ளது என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.