டோலோ650 மாத்திரை தயாரிக்கும் நிறுவனம் மருத்துவர்களுக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: டோலோ650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனம் மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளதாக இந்திய மருத்துவம் மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கொரோனா காலத்தில் மிக அதிகமான அளவில் விற்கப்பட்ட மாத்திரை டோலோ-650 என்பது அனைவருக்கும்  தெரிந்த விஷயம்.

இந்த நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக கிடைத்த தகவலையடுத்து, கடந்த 6-ம் தேதி மைக்ரோ லேப்ஸ் லிமிடட் நிறுவனத்திக்கு சொந்தமாக 9 மாநிலங்களில் இருக்கும் 36 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் அதிரடியாக நடத்தினர். இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.1.20 கோடி ரொக்கம், ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையின் போது, மைக்ரோ லேப்ஸ் நிறுவன அதிகாரிகள் டிஜிட்டல் ஆதாரங்களை மறைக்கவும், அழிக்கவும் முயன்றதாக வருமானவரித்துறை குற்றம் சாட்டியுள்ளது.

இதுகுறித்து ஒன்றிய நேரடி வரிகள் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில்:
மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தில் நடத்திய சோதனையில், தங்கள் மருந்துகளை ஊக்குவிக்கவும், விற்பனையை அதிகப்படுத்தவும், மருத்துவர்களுக்கு பரிசுகள், இலவசங்கள், வழங்கிய வகையில் ரூ.1000 கோடி செலவிடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. விற்பனை மற்றும் ஊக்குவிப்புக்காக நேர்மையற்றமுறையில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் நடந்துள்ளது.

மேலும், கணக்கில் வராத ரூ.1.20 கோடி ரொக்கம், ரூ.1.40 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வருவாயை மறைத்தல், செலவுகளை மறைத்தல், வரி ஏய்ப்பு செய்தல், போன்றவற்றில் ரூ.300 கோடிக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் வலி நிவாரணியாகவும், காய்ச்சலைக் குறைக்கவும் டோலோ-650 மாத்திரையை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.  மருந்துக்கடைகளிலும் டோலோ 650 மாத்திரை  அதிக அளவில் விற்கப்பட்டது. அந்த வகையில் மட்டும் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் இருந்து டோலோ 650 மாத்திரைகள், 350 கோடி மாத்திரைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஓர் ஆண்டில் மட்டும் ரூ.400 கோடி வருமானம் ஈட்டப்பட்டது. இந்தத் தகவல் மைக்ரோ லேப் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோலோ650 மாத்திரை தயாரிக்கும் மைக்ரோ லேப் நிறுவனம் மருத்துவர்களுக்கு மட்டும் ரூ.1000 கோடிக்கு இலவசப் பொருட்களை வழங்கியுள்ளது என்று இந்திய மருத்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளது. டோலோ 650 விற்பனைக்காக1000 கோடிக்கு ரூபாய்க்கு இலவசங்கள் அளிக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதிகள் டிஒய்சந்திரசூட், ஏஎஸ் போபண்ணா தலைமையிலான அமர்வு நேற்று விசாரித்தது. டோலோ 650 மாத்திரை தயாரிக்கும் டோலோ நிறுவனம் ரூ.1000 கோடிக்கு மருத்துவர்களுக்கு இலவசங்களை வழங்கியுள்ளது என இந்திய மருத்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பும் தெரிவித்தது.இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், இது தீவிரமான விவகாரம், இந்த விஷயத்தில் ்அடுத்த 10 நாட்களுககுள் மத்திய அரசு பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.