பிரித்தானியாவிலிருந்து இந்த நாட்டு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஒப்பந்தம் தயார்…


பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டு சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தப்பட உள்ளார்கள்.

அதற்கான ஒப்பந்தம் ஒன்று சமீபத்தில் கையெழுத்தாகியுள்ளது.  

பிரித்தானியாவிலிருந்து பாகிஸ்தான் நாட்டு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டது.

பிரித்தானிய உள்துறைச் செயலரான பிரீத்தி பட்டேல், பாகிஸ்தான் உள்துறைச் செயலரான Yousaf Naseem Khokhar மற்றும் பிரித்தானியாவுக்கான பாகிஸ்தான் உயர் ஆணையர் Moazzam Ahmad Khan ஆகியோர், நேற்று முன்தினம் (புதன்கிழமை), லண்டனில் வைத்து அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்கள்.

அந்த ஒப்பந்தத்தின்படி, பாகிஸ்தான் நாட்டுக் குற்றவாளிகள், புகலிடக் கோரிக்கை நிரகரிக்கப்பட்டோர், விசா காலம் முடிந்தபின்பும் பிரித்தானியாவில் தங்கியிருப்போர், புலம்பெயர்தல் குற்றமிழைத்தோர் ஆகியோர் பாகிஸ்தானுக்கு நாடுகடத்தப்பட இருக்கிறார்கள்.

பிரித்தானியாவிலிருந்து இந்த நாட்டு சட்டவிரோத புலம்பெயர்ந்தோரை நாடுகடத்த ஒப்பந்தம் தயார்... | Convention The Deportation Of Illegal Immigrants

image -file

பிரித்தானிய உள்துறை அலுவலகத் தரவுகளின்படி, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களிலுள்ள சிறைகளில், சுமார் 2,500 பாகிஸ்தான் நாட்டவர்களான குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

இது மொத்த வெளிநாட்டுக் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் சுமார் 3 சதவிகிதம் என்பது குறிப்பிடத்தக்கது.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.