ஸ்ட்ரீட் லைட்-ஐ ஆஃப் பண்ணுங்கப்பா.. சீன அரசு அறிவிப்பால் மக்களே சோகம்..!

தென்மேற்கு சீனா பகுதியின் தலைநகரில் வெளிப்புற விளம்பரங்கள், சுரங்கப்பாதை விளக்குகள் மற்றும் கட்டிட அடையாளங்கள் என பலவற்றை எரிசக்தியைச் சேமிக்க மங்கலாக்க (DIM) அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

இப்பகுதி அதிக வெப்பநிலை உருவாகியிருக்கும் காரணத்தால் மின்சார நெருக்கடி அதிகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.100 டூ 42,000… ரூ.1 லட்சம் முதலீடு.. கோடிக் கணக்கில் வருமானம்..உங்க போர்ட்போலியோவில் இருக்கா?

சிச்சுவான் மாகாணம்

சிச்சுவான் மாகாணம்

இந்த வாரம் சிச்சுவான் மாகாணத்தில் வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் (104 பாரன்ஹீட்)க்கு மேல் உயர்ந்துள்ளது. இதனால் மக்கள் மத்தியில் ஏர் கண்டிஷனிங் தேவை பெரிய அளவில் அதிகரிக்கும், நீர்த்தேக்கங்கள் வறண்டு போகும் நிலை உருவாகியுள்ளது.

மின்சார தேவை

மின்சார தேவை

இதேபோல் சிச்சுவான் மாகாணம் தனது மின்சார தேவைக்கு அணைகளையும், அணையில் இருந்து உருவாக்கப்படும் மின்சாரத்தை அதிகளவில் நம்பியிருக்கிறது. இந்த நிலையில் வெப்ப நிலை 40 டிகிரி-க்கு மேல் உயர்ந்துள்ளது மூலம் நீர் தேக்கத்தின் அளவு குறையும். இதனால் மின்சார உற்பத்தியும் சரியும் நிலை உருவாகியுள்ளது.

தொழிற்சாலைகள்
 

தொழிற்சாலைகள்

மாகாண தலைநகரான செங்டுவில் ஜப்பானிய கார் நிறுவனமான டொயோட்டா கூட்டணியில் இயங்கி வரும் தொழிற்சாலைகள் உட்பட அனைத்து தொழிற்சாலைகளையும் வேலையை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.

மின்வெட்டு

மின்வெட்டு

அதே நேரத்தில் மற்றொரு நகரமான Dazhou பகுதியில் பல லட்சம் போர் மின்வெட்டுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா-வை தொடர்ந்து சீனா-வை மின்வெட்டு பாதித்து உள்ளது, இதனால் தென்மேற்கு சீனா பகுதியில் தயாரிக்கப்படும் உற்பத்தி பொருட்களின் அளவும் எண்ணிக்கையும் குறையும்.

வெய்போ தளம்

வெய்போ தளம்

தென்மேற்கு சீனா பகுதி அரசுகளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தொடர்ந்து பல அரசு அமைப்புகள், அரசு நிறுவனங்கள் விளக்குகளை டிம் செய்ய உள்ளதாக தங்களது வெய்போ கணக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

யாங்சே நதி

யாங்சே நதி

அதன் முக்கியமான யாங்சே நதி அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக வறண்டு போகிறது, மேலும் கடந்த ஐந்தாண்டுகளில் சராசரியை விட 51 சதவீதம் குறைவான நீர் ஓட்டம் சீனாவில் உருவாகிறது என அரசு செய்தி ஊடகமான சீனா நியூஸ் சர்வீசஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Chinese cities dims lights in public places amid 40 degrees Celsius heatwave creates power crunch

Chinese cities dims lights in public places amid 40 degrees Celsius heatwave creates power crunch ஸ்ட்ரீட் லைட்-ஐ ஆஃப் பண்ணுங்கப்பா.. சீன அரசு அறிவிப்பால் மக்களே சோகம்..!

Story first published: Friday, August 19, 2022, 18:59 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.