ஆணுடன் வாழ விருப்பமில்லை… தன்னை தானே திருமணம் செய்து கொண்ட நடிகை

பெங்களூரு: ஆணுடன் வாழ விருப்பமில்லை என்பதால் நடிகை கனிஷ்கா சோனி தன்னைத் தானே திருமணம் செய்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். குஜராத் மாநிலத்தை சேர்ந்த நடிகை கனிஷ்கா சோனி, தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்திய கலாசாரத்தின் படி, திருமணம் என்பது அன்பு மற்றும் நேர்மையுடன் தொடர்புடையது. என்னை நானே திருமணம் செய்து கொண்டேன். எனது கனவுகள் அனைத்தும் நனவாகியுள்ளன. இந்த உலகில் என்னை மட்டுமே  நான் நேசிக்கிறேன். எனக்கு ஆண் துணை தேவையில்லை.

தனியாக இருப்பதே எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. எனக்குள் வலிமையும் சக்தியும் கொண்டவள் என்பதால், எனக்குள் சிவனும் சக்தியும் வசிக்கிறார்கள்’ என்று கூறியுள்ளார். சாதாரண உடையில் இந்து கலாசாரப்படி, திருமணமான பெண்கள் தங்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போல், நடிகை கனிஷ்கா சோனியும் தனது நெற்றியில் குங்குமம் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.