இந்திய பிரதமர்களில் பொதுத் துறை நிறுவனங்களை அதிகளவில் விற்றவர் யார் தெரியுமா?

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு தொழில்துறையை மேம்படுத்து அரசு பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியது.

தனியார் நிறுவனங்களால் பெரிய முதலீடுகளைச் செய்ய முடியாத சூழல், தேவையான தொழில்நுட்பங்கள் இல்லாதது போன்றவை அதற்குக் காரணமாக அமைந்தன.

ஆனால் இப்போது அதில் பல்வேறு பொதுத் துறை நிறுவனங்களை மத்திய அரசு தொடர்ந்து விற்று வருகிறது. அதற்கு நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பதால் அரசின் நிதிச் சுமை குறையும் என்பது முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

எனவே இந்தியாவில் இதுவரையில் பிரதமர்களாக இருந்தவர்கள் உருவாக்கிய பொதுத் துறை நிறுவனங்கள், தனியாருக்கு விற்ற பொதுத் துறை நிறுவனங்கள் எவ்வளவு என இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

ஜவஹர்லால் நேரு

சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக 1950-ம் ஆண்டு பதவியேற்ற ஜவஹர்லால் நேரு மொத்தம் 33 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். ஒரு பொதுத் துறை நிறுவனங்களைக் கூட தனியாருக்கு விற்கவில்லை. அவற்றில் முக்கியமானவை அணுசக்தித் துறை (1954), பாபா அணு ஆராய்ச்சி மையம் (1954), இயற்பியல் ஆய்வுக்கூடம் (1947), இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (1962), தேசிய வேதியியல் ஆய்வகம் (1950), தேசிய இயற்பியல் ஆய்வகம் (1947), எரிபொருள் ஆராய்ச்சி நிலையம் (1946), மத்திய கண்ணாடி மற்றும் செராமிக்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (1950) மற்றும் தேசிய உலோகவியல் ஆய்வகம் (1950). எல்ஐசி நேரு பிரதமராக இருக்கும் போது 5 கோடி ரூபாய் மூலதனத்தில் உருவாக்கப்பட்டது.

 லால் பகதூர் சாஸ்திரி

லால் பகதூர் சாஸ்திரி

இந்தியாவின் இரண்டாம் பிரதமராகப் பதவியேற்ற லால் பகதூர் சாஸ்திரி மொத்தம் 5 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். ஒன்றுகூட விற்கவில்லை. அவற்றில் முக்கியமானது பால் உற்பத்தியை அதிகரிக்கக் கொண்டு வரப்பட்ட தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம், பசுமை புரட்சி போன்றவை இவர் பிரதமராக இருந்த காலகட்டத்தில் நடைபெற்றவை ஆகும்.

 இந்திரா காந்தி
 

இந்திரா காந்தி

1966-1977 மற்றும் 1980-1984 என இரண்டு முறை இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்ற இந்திரா காந்தி 66 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். ஒரு நிறுவனத்தைக் கூட தனியாருக்கு விற்கவில்லை.

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

1984 முதல் 1989-ம் ஆண்டு முதல் இந்தியாவின் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி 16 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியுள்ளார். ஒன்றைக்கூடத் தனியாருக்கு விற்கவில்லை.

வி.பி.சிங்

வி.பி.சிங்

1989 முதல் 1990 என ஒரு வருடம் இந்திய பிரதமராக இருந்த ஜனதா தல் கட்சி தலைவர் வி.பி.சிங் 2 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று பொதுத் துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு இவரது பதவிக் காலத்தில் தான் வழங்கப்பட்டது. இவரும் எந்த பொதுத் துறை நிறுவனங்களையும் தனியாருக்கு விற்கவில்லை. ஆனால் இவர் நட்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்களைத் தனியருக்கு விற்க விருப்பம் தெரிவித்து இருந்தார்.

பி.வி.நரசிம்மராவ்

பி.வி.நரசிம்மராவ்

வழக்கறிஞர் மற்றும் அரசியல்வாதியான பி.வி.நரசிம்மராவ் 1991 முதல் 1996 வரை இந்தியாவின் 9வது பிரதமராக பணியாற்றினார். இவரது பதவிக் காலத்தில் 14 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்றுகூடத் தனியாருக்கு விற்கவில்லை.

ஐ.கே.குஜ்ரால்

ஐ.கே.குஜ்ரால்

1997 முதல் 1998 வரை இந்தியாவின் பிரதமர் பதவி வகித்தவர் ஐ.கே.குஜ்ரால். இவரது பதவிக் காலத்தில் 3 பொதுத் துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஒன்றும் தனியாருக்கு விற்கப்படவில்லை.

அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய்

அடல் பிகாரி வாஜ்பாய் 1998 முதல் 1004 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தார். 17 பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கினார். முதல் முறையாக இவரது பதவிக் காலத்தில் தான் 7 பொதுத் துறை நிறுவனங்கள் விற்கப்பட்டன.

மன்மோகன் சிங்

மன்மோகன் சிங்

2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக இருந்தவர் மன்மோகன் சிங். இவரது பதவிக் காலத்தில் 23 பொதுத் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. 3 பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டன.

நரேந்திர மோடி

நரேந்திர மோடி

2014-ம் ஆண்டு தற்போது வரை பிரதமராக இருக்கும் நரேந்திர மோடியின் அரசுக்குக் கீழ் இதுவரையில் ஒரு பொதுத் துறை நிறுவனங்கள் கூட உருவாக்கப்படவில்லை. ஆனால் 23 நிறுவனங்கள் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளன.

சர்ச்சை

சர்ச்சை

இந்தியாவில் பாஜக தலைமையிலான ஆட்சி இருக்கும் போது தான் அதிகளவில் பொதுத் துறை நிறுவனங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்ற கருத்துக்கள் பெரும் சர்ச்சையாகி வருகிறது.

ஆதரவு

ஆதரவு

நட்டத்தில் இயங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களைத் தனியாருக்கு விற்பது நல்லது தானே. அதனால் அரசுக்கு ஆகும் செலவுகள் குறையும். அரசு என்பது மக்களுக்கு பணியாற்றத் தான். லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களை நடத்துவது அல்ல என்று ஆதரவு குரல்களும் வருகின்றன.

எதிர்ப்புகள்

எதிர்ப்புகள்

அரசு நட்டத்தில் இயங்கி வரும் நிறுவனங்களை மட்டும் விற்கவில்லை. லாபத்தில் இயங்கி வரும் எல்ஐசி போன்ற நிறுவனங்களையும் விற்கிறது. இப்படியே எல்லா பொதுத் துறை நிறுவனங்களையும் அரசு விற்றுவிட்டால், வரி மூலம் கிடைக்கும் வருவாயை நம்பி மட்டுமே அரசு செயல்படும் நிலை உருவாகிவிடும். எனவே அரசுக்கு நிறுவனங்கள் மூலம் கிடக்கும் நேரடி வருமானமும் முக்கியம் என கூறப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

PSUs Created And Privatized By Prime Ministers of India

PSUs Created And Privatized By Prime Ministers of India | இந்தியப் பிரதமர்களில் பொதுத் துறை நிறுவனங்களை அதிகளவில் விற்றவர் யார் தெரியுமா?

Story first published: Sunday, August 21, 2022, 7:20 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.